- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் வந்த கிளைமேக்ஸ்… நான் சொன்னதை இயக்குனர் ஏத்துக்க மறுத்துட்டார் - நடிகர் ரஜினிகாந்த்...

அந்த படத்தில் வந்த கிளைமேக்ஸ்… நான் சொன்னதை இயக்குனர் ஏத்துக்க மறுத்துட்டார் – நடிகர் ரஜினிகாந்த் தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டில் வெளியான படம் படையப்பா. இது மாபெரும் வெற்றிப் படமாக இருந்தது. இதில் வில்லி கேரக்டரில் நடிகை ரம்யாகிருஷ்ணன் நடிப்பு பெரிய அளவில் பாராட்டை பெற்றது. ரஜினியை எதிர்க்கும் நீலாம்பரி கேரக்டரில் அவர் அசத்தியிருந்தார்.

கடந்த ஆண்டில் இந்த படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டு பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. வசூலை வாரிக் குவித்தது. இந்த படத்தை நடிகர் ரஜினிகாந்த் சொந்தமாக தயாரித்தார். மேலும் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் எழுதியதும் ரஜினிகாந்த் தான். பொன்னியின் செல்வன் கதையில் வரும் நந்தினி கேரக்டர்தான் நீலாம்பரி கேரக்டரின் இன்ஸ்பிரேசன் என்றும் அப்போதே கூறியிருந்தார்.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, படையப்பா கிளைமாக்ஸ் காட்சியில் நீலாம்பரி கேரக்டர் படையப்பாவிடம் மன்னிப்பு கேட்பது போல பேசும் காட்சி இருந்தது. ஆனால் அது எனக்கு சரியாகபடவில்லை. அப்படி பேசினால் அந்த கேரக்டரின் கெத்து போய்விடும். நீலாம்பரிக்கான கட்ஸ் இருக்காது என்று எனக்கு தோன்றியது.

அதனால் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரிடம் கிளைமாக்ஸ்சை மாற்ற சொன்னேன். படையப்பா இந்த ஜென்மத்துல நீ ஜெயிச்சுட்டே. ஆனா அடுத்த ஜென்மத்தில் நான் வந்து உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன் என்று நீலாம்பரி பேசிவிட்டு தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறப்பது போல அந்த காட்சியை எடுக்க சொன்னேன்.

- Advertisement -

இதற்கு கேஎஸ் ரவிக்குமார் மறுத்துவிட்டார். அப்படி எடுத்தால் படத்தின் மொத்த மரியாதையும் நீலாம்பரி கேரக்டருக்கு போய்டும். உங்கள் கேரக்டர் வீக் ஆயிடும். அப்படி செய்யவே மாட்டேன். அப்படி கிளைமாக்ஸ் எடுத்தால் உங்க ரசிகர்கள் என்னை சும்மா விட மாட்டாங்க. நான் தியேட்டருக்குள்ள கால் வைக்க முடியாது என்றும் சொன்னார்.

ஆனால் அதுதான் சரியாக கிளைமாக்ஸ் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஷூட்டிங் ஸ்பாட்டுல அப்படி ஒரு காட்சியை நீங்க எடுங்க. படக்குழு தரப்பில் என்ன மாதிரி ரியாக்சன் வருதுன்னு பாருங்க. அப்புறம் நாம எந்த கிளைமாக்ஸ்ன்னு முடிவு பண்ணிக்கலாம்ன்னு சொன்னேன். நான் சொன்ன கிளைமாக்ஸ்தான் கடைசியில் ஜெயித்தது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்