- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த நாளில் குட் பேட் அக்லி படத்தை வெளியிட முடிவு, அப்போ அஜீத்குமார் ரசிகர்களுக்கு இது...

அந்த நாளில் குட் பேட் அக்லி படத்தை வெளியிட முடிவு, அப்போ அஜீத்குமார் ரசிகர்களுக்கு இது இரட்டிப்பு கொண்டாட்டமா இருக்குமே? – ஆனா விடாமுயற்சி எப்பங்க வரும்?

- Advertisement -

தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜீத் குமார். அவர் நடித்த படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான வரவேற்பும், எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. வசூலிலும் பெரிய அளவில் அஜீத் குமார் வசூல் மன்னனாக இருந்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் துணிவு. இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கியிருந்தார்.

வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் மஞ்சு வாரியார் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் இந்த படம் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெளியான நிலையில், ஏறக்குறைய 22 மாதங்கள் ஆன நிலையில், அடுத்த அஜீத்குமார் நடித்த படம் இதுவரை வெளியாகவில்லை.
துணிவு படத்தைத் தொடர்ந்து அஜீத்குமார் நடித்த படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு அக்டோபரில் அஜர்பைஜானில் துவங்கியது.

- Advertisement -

ஆனால் ஓராண்டு ஆகியும் இன்னும் இந்த படம் வெளியாகவில்லை. படப்பிடிப்பு 95 சதவீதம் முடிவடைந்து விட்டதாக கூறப்படும் நிலையில், இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. அஜீத்குமார், திரிஷா நடிக்க வேண்டிய அந்த பாடல் காட்சி ஸ்பெயின் நாட்டில் விரைவில் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விடாமுயற்சி படத்தை தீபாவளிக்கு ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அந்த படம், 2025ம் ஆண்டில் ஜனவரி 14ம் தேதியன்று பொங்கலுக்கு வெளிவரும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது ஜனவரி 10ம் தேதி இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் படம் ரிலீஸ் ஆவதால், பொங்கலுக்கு விடாமுயற்சி படம் ரிலீஸ் இல்லை என்று லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக நேற்று தகவல் வெளியானது.

- Advertisement -

விடாமுயற்சி படம் எப்போது வெளியாகும் என்பதை லைகா புரடக்சன்ஸ் நிறுவனமும், படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனியும் இன்னும் உறுதியாக அறிவிக்காமல் இருப்பது ரசிகர்களை பலத்த ஏமாற்றம் அடைய செய்துள்ளது. இதற்கிடையே கடந்த சில மாதங்களாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. விடாமுயற்சியை தொடர்ந்து இந்தப் படத்திலும் நாயகியாக திரிஷாதான் நடித்துள்ளார். பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் 2 மாதங்களுக்கு நடக்கும் என்று தெரிய வந்துள்ளது. இந்த சூழலில் குட் பேட் அக்லி படம் ரிலீஸ் எப்போது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற மே 1ம் தேதி அஜீத்குமார் பிறந்த நாளில் இந்த படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது அஜீத் ரசிகர்களுக்கு அவரது பிறந்த நாளில் குட் பேட் அக்லி படம் வெளியாவது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

- Advertisement -

சற்று முன்