- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் ஹீரோ மெட்டீரியல்தான்… சிவாஜி சார் மாதிரி இருக்கேன்னு எல்லாரும் சொல்வாங்க… என்கிட்ட ஒரு லுக்...

நான் ஹீரோ மெட்டீரியல்தான்… சிவாஜி சார் மாதிரி இருக்கேன்னு எல்லாரும் சொல்வாங்க… என்கிட்ட ஒரு லுக் இருக்குது – பிக்பாஸ் பிரபலம் தந்த அதிரடி ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

சமீபத்தில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் திவாகர். ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் மக்கள் மத்தியில் கவனம் பெற்றவர். இவர் தன்னைத்தானே வாட்டர் மெலன் ஸ்டார் என்று அழைத்துக் கொள்கிறார். மேலும் அவர் பேசும் போதும் ஒவ்வொரு ரீல்ஸ் செய்யும்போது தமிழ்நாட்டின் நடிப்பு அரக்கன் என்றும் அவரே கூறிக்கொள்வது வழக்கம்.

கஜினி படத்தில் சஞ்சய் ராமசாமி கேரக்டரில் நடித்த நடிகர் சூர்யா ஒரு காட்சியில் தர்பூசணி சாப்பிட்டபடி தனது ஊழியர்களை விரலசைத்து அங்கிருந்து போகுமாறு சொல்வார். அதை போல நடித்து காட்டி ரீல்ஸ் போட்டு நான்தான் வாட்டர்மெலன் ஸ்டார் என்று கூறிக்கொண்டு வருபவர்கள் தான் இந்த திவாகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்தில் விஜய் விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் வாட்டர்மெலன் திவாகரும் கலந்துக்கொண்டார். வீட்டுக்குள் இவர் செய்த அலப்பரை எல்லாம் வாய்விட்டு சிரிக்கும்படியாக தான் இருந்தது. அதே நேரத்தில் ரொம்பவும் அநாகரீகமாக அவர் நடந்த கொண்டதும் பார்வையாளர்களை எரிச்சலூட்டியது.

அதே நேரத்தில் பிக்பாஸ் தொகுப்பாளராக வந்த நடிகர் விஜய் சேதுபதியும் அவ்வப்போது திவாகர் செய்த அழிச்சாட்டியங்களை எல்லாம் சுட்டிக்காட்டி கண்டித்தார். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் 40 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டுக்குள் தாக்கு பிடித்த அவரை ஒருவழியாக பிக்பாஸ் வெளியேற்றியதால் பார்வையாளர்கள் நிம்மதியடைந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய வாட்டர்மெலன் திவாகர் கூறியதாவது, வீடியோ காலில் நிறைய பேர் என்கிட்ட பேசறாங்க. நீங்க குண்டா இருந்தாலும் பார்க்க ஒரு லுக்கா அழகா தான் இருக்கீங்க. உங்களுக்கு கொஞ்சம் வயிறு மட்டும் இருக்கு. அதை மட்டும் குறைச்சால் போதும். இப்படி எல்லாம் என்னை பார்க்கறவங்க என்கிட்ட ஓபனா சொல்றாங்க. சோ, இதுவே ஹீரோ மெட்டீரியலா தான் இருக்குது.

நீங்க வேணா நான் துபாய் போயிட்டு வந்த போட்டோஸ் எல்லாம் பாருங்களேன். கோட் சூட் எல்லாம் நான் போட்டுட்டு வர்ற வீடியோஸ் எல்லாம் பயங்கர லுக்கா இருக்கும். அதுல பில்லா ரீல்ஸ் பண்ணினதா இருக்கட்டும். வர்றதா இருக்கட்டும். என்னை சிவாஜி சார் மாதிரியே இருக்கறதா பல பேர் சொல்வாங்க. என்னுடைய பேஸ் வந்து ரொம்ப ஒரு லுக்கா இருக்குது என்று வாட்டர்மெலன் திவாகர் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் அதை பார்த்து வயிறு வலிக்க சிரித்து ஷேர் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்