- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கே பாடம் கத்துக்கொடுத்த வாத்தியார்… அவர்தான் அப்படி ஒரு முடிவை என்னை எடுக்க வைத்தார் -...

எனக்கே பாடம் கத்துக்கொடுத்த வாத்தியார்… அவர்தான் அப்படி ஒரு முடிவை என்னை எடுக்க வைத்தார் – கே பாக்யராஜ் குறித்து பேசிய சினிமா பிரபலம்!

- Advertisement -

சமீபத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜூக்கு சினிமாவில் 50 ஆண்டு நிறைவையொட்டி பாராட்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக முதல்வர் ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்த் இசைஞானி இளையராஜா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு கே பாக்யராஜின் சினிமா ஆளுமை குறித்து பாராட்டிப் பேசினர்.

அந்த விழாவில் இசைஞானி இளையராஜா கூறியதாவது, நான் முக்கியமாக பாக்யராஜிடம் இருந்து பாடம் ஒண்ணு கத்துக்கிட்டேன். பாரதிராஜா படங்கள் எல்லாம் வரிசையாக பண்ணிட்டு இருக்கும்போது நாங்க சிச்சுவேசன் பத்தி எல்லாம் பேச மாட்டோம்.

கதையை பாரதிராஜாவே சொல்ல சொல்லவே இந்த இடத்துல ஒரு பாட்டை போட்டுக்கோ அந்த இடத்துல ஒரு பாட்டை போட்டுக்கோ என்று நாங்க பிக்ஸ் செய்துக் கொள்வோம். நானே சில இடங்களில் இந்த பாட்டு என்றும் பிக்ஸ் செய்து விடுவதுதான் அப்போது எங்களுக்குள் வழக்கமாக நடந்து வந்தது.

அப்போ ஒரு நாள் பாரதிராஜா எனக்கு வேற ஒரு முக்கியமான வேலை இருக்கு, பாக்யராஜ் உன்கிட்ட கதை சொல்லுவார்ன்னு சொன்னார். யோவ் என்னய்யா நீ கண்ட கண்ட ஆளை எல்லாம் கதை சொல்ல அனுப்பறே என்று நான் கேட்டேன். நீ கேளு கேட்டுட்டு சொல்லு என்று சொல்லிட்டார். அன்னைக்கு அவர் கதை சொன்ன விதம், 2 பேர் கதை சொன்னதை கேட்டு நான் அப்படியே அவுட் ஆகிட்டேன்.

அதில் ஒருவர் பாக்யராஜ். அன்னிக்கு அவர் சொன்ன கதையில் வந்து ஸ்கிரீன் பிளேயில் இருந்து அசந்து போயிட்டேன். அசந்து போய் சிரித்து சிரித்து சிரித்து வயிறு எல்லாம் புண்ணாகி போய் விட்டது. சிரிச்சுக்கிட்டே நான் கம்போஸ் பண்றதே விட்டுட்டேன். செகண்ட் ஆஃப் எங்கய்யான்னு கேட்க அது டைரக்டர் ஏதோ ஐடியா வெச்சிருக்கார் என்று பாக்யராஜ் சொல்லிட்டார்.

அதுக்கு அப்புறம் நாம அவரை ஒரு மாதிரியா ட்ரீப் பண்ணிட்டோம். அது தவறு. யார் கிட்ட என்ன திறமைன்னு நாம யார் டிசைட் பண்றது? அப்படீன்னு ஒரு தீர்மானம் வந்தது. அன்னையில இருந்து புதுசா யார் வந்தாலும் மியூசிக் பண்றதுங்கற முடிவுக்கு நான் வந்துட்டேன். அவங்களை மறுக்கவே கூடாதுன்னு முடிவு செஞ்சேன். அந்த முடிவுக்கு காரணம் பாக்யராஜ் தான். எனக்கு ஒரு பாடம் கொடுத்தார். எனக்கே ஒரு பாடம் கொடுத்த வாத்தியார் அவர் என்று இளையராஜா அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

சற்று முன்