- Advertisement -
Homeபொழுதுபோக்குவித் லவ் படத்துல அதெல்லாம் கொஞ்சம் கூட ஒர்க் அவுட் ஆகலே… இது ஒரு சொதப்பலான...

வித் லவ் படத்துல அதெல்லாம் கொஞ்சம் கூட ஒர்க் அவுட் ஆகலே… இது ஒரு சொதப்பலான திரைக்கதை – விளாசித் தள்ளிய பிரபலம்!

- Advertisement -

டூரிஸ்ட் பேமிலி படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமான படம் வித் லவ். அறிமுக இயக்குனர் மதன் இந்த படத்திற்கு கதை திரைக்கதை எழுதி டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் நாயகன் அபிஷன் ஜீவிந்துக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்திருக்கிறார். இந்த படத்தை எம்ஆர்பி என்டர்டைமென்ட் மகேஷ் மற்றும் சியோன் ஸ்டுடியோ சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து தயாரித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

நேற்று வெளியான வித் லவ் படம் குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஒரு வீடியோவில் பேசியிருப்பதாவது, வித் லவ் படத்தின் கதையை பொறுத்த வரையில் கதாநாயகனுக்கு பெண் பார்க்கிறார்கள். அவர்கள் இருவரும் சந்தித்து பேசும் போது அவர்களது கடந்த காலம் குறித்து பேசுகிறார்கள். இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். ஆனால் ஆண்டுகள் வித்தியாசம் உள்ளது.

- Advertisement -

இருவருக்கும் அந்த பள்ளியில் ஒரு காதல் இருந்துள்ளது. அதை இருவருமே வெளிப்படுத்தியது இல்லை. எனவே தங்களது பள்ளிக்காலத்தில் அவர்கள் காதல் வயப்பட்டவர்களை சந்தித்து அவர்களிடம் காதலைச் சொல்ல முடிவெடுக்கிறார்கள். இந்த முடிவை அவர்கள் எடுக்கும்போது இடைவேளை வந்து விடுகிறது. இடைவேளை காட்சியை வித்தியாசமாகவும் அமைத்திருந்தார்கள்.

இதுவரை பள்ளி காட்சிகளை மாற்றி மாற்றி காட்டிக் கொண்டு இருந்தார்கள். அவையெல்லாம் மேம்போக்கான காட்சிகளாக தான் இருந்தது. இந்த படத்துக்கு கொஞ்சம் சீரியஸான திரைக்கதை அமைத்திருந்தால் ஆட்டோகிராப் அழகி போன்ற தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் திரைக்கதையில் படக்குழு அதை கோட்டை விட்டுவிட்டது.

- Advertisement -

படத்தில் ஒரு காட்சி நன்றாக இருக்கிறது என்று நினைத்தால் அடுத்த காட்சி முந்தையக் காட்சியை சீரழிக்கும் வகையில் உள்ளது. கதாநாயகன் அவர் விரும்பிய பெண்ணுடன் சேர வேண்டும் என்ற எண்ணத்தையோ கதாநாயகி அவர் விரும்பிய ஆணுடன் சேர வேண்டும் என்ற எண்ணத்தையோ அல்லது கதாநாயகனும் கதாநாயகியும் சேர வேண்டும் என்ற எண்ணத்தையோ ஏற்படுத்தவில்லை.

கதாநாயகன் அவர் விரும்பிய பெண்ணை சந்திக்கும் காட்சி நன்றாக உள்ளது. கிளைமாக்ஸ்சில் ஒரு காட்சி வைத்திருந்தார்கள். அது கொஞ்சம் கூட ஒர்க் அவுட் ஆகவில்லை என்று ப்ளு சட்டை மாறன் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். படம் பார்த்த பலரும் வித் லவ் படத்தை ஆஹா ஓஹோ என பாராட்டி வரும் நிலையில் ப்ளு சட்டை மாறனின் இந்த நெகட்டிவ் விமர்சனம் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

- Advertisement -

சற்று முன்