- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய்க்கு வருகிற கூட்டம் எல்லாம் தேர்தலில் ஓட்டுகளாக மாறிவிடுமா? உண்மையை வெளிப்படையாக சொன்ன பிரபல...

நடிகர் விஜய்க்கு வருகிற கூட்டம் எல்லாம் தேர்தலில் ஓட்டுகளாக மாறிவிடுமா? உண்மையை வெளிப்படையாக சொன்ன பிரபல நடிகர்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த தீ படத்தில் ரஜினிக்கு தம்பியாக போலீஸ் அதிகாரியாக நடித்தவர் நடிகர் சுமன். தெலுங்கில் ஏராளமான படங்களில் சுமன் நடித்திருக்கிறார். தமிழில் விஜய் நடித்த குருவி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். மேலும் தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் நாயகி தமன்னாவின் அப்பாவாகவும் சுமன் நடித்திருந்தார்.

எனினும் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் ஆதிமூலம் என்ற வில்லன் கேரக்டரில் சுமன் நடித்திருந்தார். கார்பரேட் முதலாளியாக தொழிலதிபராக அரசாங்கத்தையை தீர்மானிக்கும் ஒரு மைய சக்தியாக அவரது நடிப்பு சிவாஜி படத்தில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

சமீபத்தில் தஞ்சாவூருக்கு வந்த நடிகர் சுமனை நிருபர்களை சந்தித்தனர். அவரிடம் வருகிற சட்டசபை தேர்தல் குறித்தும் நடிகர்களின் அரசியல் வருகை குறித்தும் கேள்வி எழுப்பினர். அதற்கு நடிகர் சுமன் கூறியதாவது, எலக்சன் வரைக்கும் மக்கள் ஒரு மைண்ட் செட்டில் இருப்பாங்க.தேர்தல் நேரத்துல ஒரு வாரம் 5 நாள் முன்னாடி திடீர்ன்னு ஒரு அறிக்கை வந்தால் ஒரு மாற்றம் வந்தால் அவங்க முடிவை மாத்திக்குவாங்க.

அதே மாதிரி வருகிற மக்கள் கூட்டத்தை பார்த்து நாம் ஒரு கணக்கு போட முடியாது. கூட்டம் இருப்பதால் ஒருவர் ஜெயிப்பார் என்றும் சொல்ல முடியாது. நடிகர்களுக்கு வருகிற மக்கள் கூட்டம் எப்படி என்றால், திரையில் பார்க்கிற மாதிரி நேரிலும் இருப்பாரா? லேடீஸ் எப்படி இருப்பாங்க. கருப்பா இருப்பாங்களா வெள்ளையா இருப்பாங்களா ஒல்லியா இருப்பாங்களா குண்டா இருப்பாங்களா எப்படி இருப்பாங்க? இதை பார்க்கவும் ஒரு கூட்டம் இருக்குது.

- Advertisement -

இதை எல்லாம் தாண்டி கேஸட் இருக்குது, கம்யூனிட்டி இருக்குது, ஒரிஜினல் குவாலிட்டீஸ்ன்னு இதுல இன்னும் நிறைய இருக்குது. தேர்தல் நேரத்துல கூட்டணி முடிவுகள் எல்லாம் வந்த பிறகு எது எது எல்லாம் எப்படி மாறும் என்று எதுவும் இப்போது சொல்ல முடியாது. ஆனால் தேர்தல் நேரத்துல எதிர்பார்க்காத மாதிரி சில விஷயங்கள் நடக்கவும் வாய்ப்பு இருக்குது. அப்படி எல்லாம் முன்பு நடந்திருக்கிறது.

இளைஞர்கள் ஒரு மாதிரியும் மிடில் ஏஜ் மக்கள் ஒரு மாதிரியும் சீனியர் சிட்டிசன்ஸ் வயதானவர்கள் ஒரு மாதிரியும் இதுல யோசிப்பாங்க. இந்த அரசாங்கம் வருவதால் எங்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று யோசிப்பவர்களும் இருப்பாங்க. அதனால் எதையும் இப்போது உறுதியாக சொல்ல முடியாது. தேர்தல் நேரத்துல தான் எதுவும் உறுதியாகும் என்று நடிகர் சுமன் செய்தியாளர்களிடம் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்