நடிகர் விஜய் தவெக கட்சியை ஆரம்பித்து 2 ஆண்டுகளாகி விட்டது. கடந்த 2ம் தேதி தான் தவெக கட்சி 3ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு தமிழக மக்கள் மத்தியில் கிடைத்து வரும் அமோக ஆதரவு தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் ஒரு மனக்கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக ஆளுங்கட்சி திமுகவுக்கு விஜயின் வருகையும் மக்கள் அவருக்கு தருகிற அபரிமிதமாக வரவேற்பும் திமுகவினர் மத்தியில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கூட்டணி பலத்தை காட்டிலும் தனித்து நின்றே ஜெயித்து விடுவேன் என்று தவெக தலைவர் விஜய் பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று விருதுநகர் கள்ளக்குறிச்சியில் திமுக இளைஞரணி மாநாடு நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்றார். அப்போது அவர் மேடையில் இருந்தபடியே வீடியோவில் செல்பி வீடியோ எடுத்து அதை பதிவிட்டுள்ளார். இது நடிகர் விஜயின் ஸ்டைலாகும். அவர்தான் தனது அரசியல் மாநாடு மற்றும் தவெக கூட்டங்களில் இதுபோல் செல்பி வீடியோ எடுப்பார்.
அதை அடுத்த சில மணி நேரத்துக்குள் தனது வலைதள பக்கத்தில் வெளியிடுவார். அது ஒரு மணி நேரத்தில் பல லட்சம் பார்வைகளை கடந்து விடும். அதை அப்படியே காப்பியடிப்பது போல் உதயநிதி இப்போது செல்பி வீடியோ எடுத்து பதிவிட்டதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
மேலும் இந்த மாநாட்டுக்கு வந்த ஸ்டாலின் முன்புறம் இருந்த நீண்ட ரேம்பில் நடந்து வந்தார். அப்போது அவரை நோக்கி சிலர் திமுக கட்சி துண்டுகளை வீசினர். அதில் ஒன்றை வாங்கி ஸ்டாலின் கழுத்தில் சுற்றிக்கொண்டார். இதுவும் விஜய் ஸ்டைல்தான். அவர்தான் இப்படி ரேம்ப் வாக்கில் நடக்கும் போது கட்சி துண்டுகளை தொண்டர்கள் வீசினால் கழுத்தில் மாலையாக சுற்றிக் கொள்வார்.
ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் நடிகர் விஜய் போலவே சட்டை பேண்ட் அணிந்து அவரது டிரஸ் கோடை காப்பியடிப்பதாக தவெக கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜூனா கிண்டல் செய்திருந்தார். இப்போது செல்பி வீடியோ, கழுத்தில் திமுக துண்டு சுற்றும் ஸ்டாலின் என விஜயை காப்பியடித்து திமுக தலைவரும் அவரும் மகனும் செய்வது நெட்டிசன்கள் மத்தியில் கிண்டல் செய்யப்படுகிறது.





