- Advertisement -
Homeபொழுதுபோக்குதேடி வந்த வாய்ப்பை நிராகரித்த நடிகர் அஜீத்குமார்… தயாரிப்பாளர் தில் ராஜூ எடுத்த அதிரடி முடிவு...

தேடி வந்த வாய்ப்பை நிராகரித்த நடிகர் அஜீத்குமார்… தயாரிப்பாளர் தில் ராஜூ எடுத்த அதிரடி முடிவு – தெலுங்கு மாஸ் ஹீரோவுக்கு அடித்தது ஜாக்பாட்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமாருக்கு கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வரவேற்பும் ஆதரவும் இல்லை. எனினும் விஜய்க்கு போட்டியாக அவரது படங்கள் ரிலீஸாகும் போது ஓரளவுக்கு அவரது படங்களும் ரசிகர்களால் போட்டி போட்டுக்கொண்டு ஓடியது. ஆனால் விஜய் இப்போது அரசியலுக்கு போய்விட்டார்.

அதனால் தமிழ் சினிமாவில் போட்டியாளர் இல்லாமல் அஜீத்குமார் தனியாக இருக்கிறார். அதனால் அவருக்கு பெரிய அளவில் தமிழ் சினிமாவில் வியாபாரம் இல்லை. அவரது படங்களை பெரிய பட்ஜெட் படங்களாக தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் தயாராக இல்லை. மேலும் அவர் தனது சம்பளமும் ரூ. 186 கோடி என்று சொல்வதால் தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடும் நிலையே உள்ளது.

- Advertisement -

இதற்கிடையே கடந்த 2024ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் மார்கோ. இந்த படத்தின் இயக்குனர் ஹனீப் அதானி. மார்கோ வன்முறை படமாக விமர்சனம் இருந்தாலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றது. தெலுங்கில் முன்னணி திரைப்பட தயாரிப்பாளராக உள்ளவர் தில்ராஜூ.

நடிகர் அஜீத்குமாரை ஹீரோவாக வைத்து ஒரு படம் தயாரிக்க தில்ராஜூ சமீபத்தில் முடிவு செய்திருக்கிறார். இதற்காக மலையாளத்தில் மாஸ் ஹிட் கொடுத்த மார்கோ படத்தின் இயக்குனர் ஹனீப் அதானியை அழைத்து தில்ராஜூ பேசியிருக்கிறார். அப்போது அஜீத்குமாருக்காக ஒரு கதை சொல்லுமாறு கேட்டிருக்கிறார். ஹனீப் அதானி சொன்ன கதை தயாரிபபாளர் தில் ராஜூவுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.

- Advertisement -

அதன்பிறகு இந்த படம் குறித்து அஜீத்குமாரிடம் தயாரிப்பாளர் தில்ராஜூ பேசியிருக்கிறார். ஆனால் அஜீத் குமார் தரப்பில் எந்தவிதமான ரியாக்சனும் இல்லை. சம்பளம் கால்ஷீட் நடிக்க விருப்பமா இல்லையா என எந்த ஒரு பதிலும் சொல்லாமல் தயாரிப்பாளர் தில்ராஜூவை அஜீத்குமார் தரப்பில் அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இயக்குனர் ஹனீப் அதானி சொன்ன கதை மிகவும் பிடித்துப் போனதால் அந்த கதையை படமாக உருவாக்க தில்ராஜூ முடிவு செய்திருக்கிறார். தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவிடம் இந்த கதையை கூறியிருக்கிறார். கதை மிகவும் பிடித்துப் போனதால் உடனே ஓகே சொன்ன பாலகிருஷ்ணா கால்ஷீட்டும் தந்து விட்டார். இப்போது அஜீத்குமார் நடிக்க வேண்டிய படத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கிறார். அந்த படத்தை தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிக்க ஹனீப் அதானி இயக்குகிறார்.

- Advertisement -

சற்று முன்