- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது கூட வியாபாரமா? 60 கோடி ரூபாயை நிராகரித்த நடிகர் விஜய் தேவரகொண்டா… குவியும் ரசிகர்களின்...

இது கூட வியாபாரமா? 60 கோடி ரூபாயை நிராகரித்த நடிகர் விஜய் தேவரகொண்டா… குவியும் ரசிகர்களின் பாராட்டு – இது வேற லெவல் சம்பவமா இருக்குதே?

- Advertisement -

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நேஷனல் கிரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனா பல ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். கடந்த 2025ம் ஆண்டு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் வரும் 26ம் தேதி அவர்கள் திருமணம் மிகவும் விமரிசையாக நடைபெற உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள பிரமாண்ட அரண்மனையில் இரண்டு குடும்பத்தாரின் முன்னிலையில் அவர்கள் திருமணம் நடக்க உள்ளது. இதையடுத்து அரசியல் தலைவர்கள், திரையுலக நண்பர்களுக்காக ஐதராபாத்தில் மிகப் பிரமாண்டமாக திருமண வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

நடிகர் விஜய் தேவரகொண்டா, நேஷனல் கிரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் திருமண நிகழ்வுகள் ஆவணப்படமாக உருவாகிறது. இந்த ஆவணப் படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வாங்கி வெளியிட உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமண வீடியோவை வாங்க நெட்பிளிக்ஸ் ஒடிடி தளம் அதிக ஆர்வம் காட்டியது.

அந்த திருமண வீடியோவை 60 கோடி ரூபாய் வரை விலை கொடுக்க நெட்பிளிக்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. ஆனால் இது எங்கள் வாழ்க்கையின் முக்கியமான நாள். ஒரு முக்கியமான நிகழ்வு. அதை நாங்கள் காசுக்கு விற்க மாட்டோம் என்று விஜய் தேவரகொண்டா கறாராக கூறிவிட்டதாக தெலுங்கு ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

- Advertisement -

முன்னதாக நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் நடந்த போது அதை ஆவணப்படமாக எடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் 20 கோடி ரூபாய் விலை கொடுத்து அந்த வீடியோவை வாங்கிக் கொண்டது. ஆனால் எத்தனை கோடிகள் கொடுத்தாலும் எங்கள் திருமண வீடியோவை விலைக்கு விற்க மாட்டேன், வியாபாரத்துக்கு கொடுக்க மாட்டேன் என்று நடிகர் விஜய் தேவரகண்டா திட்டவட்டமாக இருக்கிறார்.

ராஷ்மிகாவின் வருங்கால கணவர் விஜய் செய்த இந்த விஷயம் குறித்து ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இது சிறந்த ஒரு முடிவு. விஜய் தேவரகொண்டா திருமண வீடியோவை விற்று காசு பார்க்க கூடாது என்கிற அவரது எண்ணம் மதிப்புக்குரியது. 60 கோடி ரூபாய் அவர்களுக்கு ஒரு பெரிய பொருட்டே அல்ல. திருமணம் உள்ளிட்ட எந்த விசேஷம் நடந்தாலும் அந்த வீடியோக்கள் புகைப்படங்களை பிரபலங்கள் விற்பனை செய்ய ஆர்வம் காட்டும் இந்த காலத்தில் விஜய் தேவரகொண்டாவின் முடிவு பெருமைக்குரியது என ரசிகர்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்