- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த தப்பை என்னிக்குமே வாழ்க்கையில் செய்யாதீங்க, ரசிகர்களுக்கு அட்வைஸ் சொன்ன இயக்குனர் செல்வராகவன்!

அந்த தப்பை என்னிக்குமே வாழ்க்கையில் செய்யாதீங்க, ரசிகர்களுக்கு அட்வைஸ் சொன்ன இயக்குனர் செல்வராகவன்!

- Advertisement -

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகன் இயக்குனர் செல்வராகவன். இவரது தம்பி நடிகர் தனுஷ், இவரது முன்னாள் மனைவி நடிகை சோனியா அகர்வால். செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் 7ஜி ரெயின்போ காலனி ஆயிரத்தில் ஒருவன் புதுப்பேட்டை போன்ற ஹிட் படங்களை தந்தவர். இப்போது 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தை இயக்கி வருகிறார்.

சினிமாவில் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் செல்வராகவன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். பீஸ்ட் பகாசுரன் மார்க் ஆண்டனி ராயன் என பல படங்களில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்து வருகிறது. அவரது குரலில் இருக்கும் கம்பீரம் நடிப்பை மேலும் மெருகேற்றி விடுகிறது. தொடர்ந்து பல படங்களில் அவர் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

- Advertisement -

நடிகர் தனுஷ் இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். தயாரிப்பாளராகவும் உள்ள அவர் இப்போது இயக்குனராகவும் வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். கடந்தாண்டில் வெளியான தனுஷ் இயக்கி நடித்த ராயன் படம் மாஸ் ஹிட் படமாக இருந்தது. ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது.

ரோட்டில் பசங்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த என்னை, திடீரென்று கூட்டி வந்து கேமரா முன் நிற்க வைத்து நடிகனாக்கி விட்டார். என்னை ஆரம்பத்தில் உருவக்கேலி செய்தவர்களுக்கு முன்னால், தேசிய விருது வாங்கும் ஒரு நடிகனாக மாற்றிய பெருமை அண்ணன் செல்வராகவனுக்கே சேரும் என்று பல மேடைகளில் நடிகர் தனுஷ் உருக்கமாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

இயக்குனர் செல்வராகவன், அவ்வப்போது தன் ரசிகர்களுக்கு தன் கருத்துகளை சொல்லும் வீடிேயோக்களை வெளியிடுவது வழக்கமாக உள்ளது. அப்படி அவர் நேற்று வெளியிட்ட ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, நீங்கள் உங்கள் லட்சியத்தை அடைய நினைப்பது நல்ல விஷயம்தான். ஆனால் அதை எதற்கு ஊர் முழுக்க தம்பட்டம் அடிக்கிறீர்கள்?

நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று யாரிடமும் சொல்ல தேவையில்லை. உங்கள் குடும்பத்தினரிடம் கூட சொல்லாதீர்கள். அப்படி சொல்லும் போது அது நடக்காமல் போய்விடும். நீங்கள் இப்படி எல்லாம் சொல்லும் போது மற்றவர்கள் அதைக்கேட்டு மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். அப்படிப்பட்ட எண்ணம் யாருக்கும் இல்லை. யாரிடமும் உதவியும் கேட்காதீர்கள். ஒன்றரையணா உதவி செய்துவிட்டு 1000 கோடிக்கு செய்தது போல் காலம் முழுவதும் சொல்லிக் காட்டி ஏளனம் செய்வார்கள் என்று அதில் செல்வராகவன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்