- Advertisement -
Homeபொழுதுபோக்குயார் போன் செஞ்சாலும் இதுதான் பதிலா? என்ன ப்ரோ இது…? - வளரும் இளம் நடிகர்கள்...

யார் போன் செஞ்சாலும் இதுதான் பதிலா? என்ன ப்ரோ இது…? – வளரும் இளம் நடிகர்கள் மணிகண்டன், பிரதீப் ரங்கநாதன் மீது எழுந்த புகார்!

- Advertisement -

எப்போதுமே ஜெயிக்கிற குதிரைகள் மீதுதான் பந்தயம் கட்டுவார்கள். சினிமாவும் ஒரு பந்தய குதிரை மாதிரிதான். யார் அதிகம் வெற்றிப் படங்களை தருகிறார்களோ, யார் நடித்த படங்களுக்கு அதிக இமேஜ் மார்க்கெட் ரசிகர்களிடம் இருக்கிறதோ அவர்களை வைத்து படம் இயக்க இயக்குனர்களும், படம் தயாரிக்க தயாரிப்பாளர்களும் முன்வருகின்றனர்.

இன்றைய சூழலில் ரஜினி கமல் நடிக்கும் படங்களை தயாரிக்க 300 கோடி முதல் 500 கோடி ரூபாய் வரை பெரிய பட்ஜெட்டில் முதலீடு வேண்டும். விஜய் இனி நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார். அஜீத்குமார் எப்போதும் கார் ரேஸில்தான் ஆர்வமாக இருக்கிறார். தவிர அவரது படத்துக்கு பெரிய வியாபாரம் இல்லை என்பதும் வெளிப்படையாகவே தெரிகிறது.

- Advertisement -

அதனால் இன்றைய சூழலில் நடிகர்கள் மணிகண்டன் பிரதீப் ரங்கநாதன் கவின் போன்ற வரும் இளம் நடிகர்களுக்கு இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் வாய்ப்பு தேடி வருகிறது. ஏனெனில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் இளம் நடிகர்களாக மணிகண்டன் பிரதீப் ரங்கநாதன் உள்ளனர்.

நடிகர் மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் லவ்வர் லவ்டுடே போன்ற படங்கள் பெரிய வெற்றியை கொடுத்தன. கோமாளி படத்தில் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்து ஹீரோவாக நடித்த லவ்டுடே டிராகன் டியூட் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக இருந்தன. அதனால் அவர்களை வைத்து படம் எடுக்க கோலிவுட்டில் அதிகம் ஆர்வம் காட்டப்படுகிறது.

- Advertisement -

ஆனால் சமீபகாலமாக இயக்குனர் யாராவது கதை சொல்வதற்காக நடிகர் மணிகண்டனை போனில் தொடர்பு கொண்டால், என்ன ஏது என்று கூட அவர் விசாரிப்பது இல்லை. ஒரு மரியாதைக்காக என்ன கதை என்று கூட ஒரு வரி கேட்பது இல்லை. இன்னும் 2 ஆண்டுகளுக்கு நான் ரொம்பவும் பிஸியான கால்ஷீட்டில் இருக்கிறேன். அப்புறம் பார்க்கலாம் என்று போனை துண்டித்து விடுகிறார்.

அதே போல்தான் நடிகர் பிரதீப் ரங்கநாதனிடம் யாராவது போனில் அழைத்து பேசினால், 25 கோடி ரூபாய் எனக்கு சம்பளம் தருவது என்றால் இதுபத்தி பேசுங்க என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லி விடுகிறார் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. சில வெற்றிப் படங்களை கொடுத்து வளரும் நடிகர்களாக இருக்கும் போதே இப்படி செய்கிறார்களே என்று ரசிகர்கள் பலரும் விமர்சிக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்