- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிக்கும் விஜய்க்கும் உள்ள ஒரே வித்தியாசம் இதுதான்… அதுதான் எனக்கு பிடிக்கலே - ஓபன் ஸ்டேட்மென்ட்...

ரஜினிக்கும் விஜய்க்கும் உள்ள ஒரே வித்தியாசம் இதுதான்… அதுதான் எனக்கு பிடிக்கலே – ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த நடிகர் மன்சூர் அலிகான்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மிகவும் விரும்பி ரசிக்கப்படும் ஒரு நடிகர் என்றால் அதில் மன்சூர் அலிகானும் ஒருவர். பல படங்களில் அவர் வில்லனாக நடித்திருந்தாலும் சில படங்களில் அவர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார். எந்த கேரக்டர் என்றாலும் அதில் தனது அழுத்தமான நடிப்பை அவர் தந்து விடுகிறார்.

ஆரம்பத்தில் சில படங்களில் நடனக்குழுவில் ஒருவராக டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்த நடிகர் மன்சூர் அலிகான் பிறகு சில படங்களில் அடியாட்களில் ஒருவராக நடித்தார். அவரை தனது 100வது படம் கேப்டன் பிரபாகரன் படத்தின் வீரபத்ரன் கேரக்டரில் வில்லனாக நடிக்க வைத்து அவருக்கு ஒரு பாதையை சினிமாவில் ஏற்படுத்தி தந்தவர் கேப்டன் விஜயகாந்த் தான்.

- Advertisement -

அதனால் தான் இன்று வரை நடிகர் மன்சூர் அலிகான் அந்த நன்றியை மறக்காமல் கேப்டன் விஜயகாந்த் தான் என் தெய்வம் என்று பல இடங்களில் குறிப்பிட்டு சொல்லி வருகிறார். விஜயகாந்த் இருந்த போது ஏதாவது கால்ஷீட் பிரச்னை மன்சூர் அலிகான் செய்தால் உடனே கேப்டனுக்கு தகவல் போகும்.

அடுத்து விஜயகாந்த் போன் வந்தால் அடுத்த நிமிடமே மன்சூர் அலிகான் பெட்டி பாம்பாக பயந்து இயக்குனர் தயாரிப்பாளர் சொல்கிறபடி நடந்து கொள்வார் என்பது போன்ற தகவல்கள் எல்லாம் கோலிவுட்டில் இருக்கின்றன. எனினும் மனதுக்கு தவறென பட்டால் அதை வெளிப்படையாக தைரியமாக பேசும் ஒரு கலைஞர் மன்சூர் அலிகான் என்பதில் பொய் இல்லை.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது, ரஜினி சார் உடன் நான் ஒரே ஒரு படம் தான் நடித்திருக்கிறேன். ஆனால் இப்போது நான் போன் பண்ணினாலும் அவர் என்னை மீட் பண்ண வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடுவார். அப்படி பலமுறை நான் போயிக்கிறேன்.

ஆனால் நடிகர் விஜய் கூட நான் 11 படம் நடித்துள்ளேன். சமீபத்தில் அவருக்கு ஆதரவாக நான் பேசின போது கூட என்னை பார்க்க அவர் மறுத்துவிட்டார். என்னை போன்ற சாதாரண மனிதர்களை எல்லாம் சந்திக்க முடியாத இடத்தில் உயரத்தில் விஜய் பறந்து கொண்டு இருக்கிறார். இதுதான் ரஜினிக்கும் விஜய்க்கும் உள்ள வித்யாசம். அதுதான் எனக்கு பிடிக்கலே என்று நடிகர் மன்சூர் அலிகான் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்