- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்போது முதலமைச்சர் எம்ஜிஆர் போட்ட அந்த உத்தரவு… இப்பவும் அதை கொண்டு வாங்க - இயக்குனர்...

அப்போது முதலமைச்சர் எம்ஜிஆர் போட்ட அந்த உத்தரவு… இப்பவும் அதை கொண்டு வாங்க – இயக்குனர் சேரன் தமிழக அரசுக்கு வைத்த கோரிக்கை!

- Advertisement -

ஆரம்பத்தில் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் சேரன். பிறகு பாரதி கண்ணம்மா படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பார்த்திபன் மீனா வடிவேலு ராஜா விஜயகுமார் ரஞ்சித் உள்ளிட்டோர்
நடித்த இந்த படத்தின் கதைக்களம் காதல் மற்றும் ஜாதி பிரச்னையை மையப்படுத்தி இருந்தது.

தொடர்ந்து பாண்டவர் பூமி பொற்காலம் தவமாய் தவமிருந்து ஆட்டோகிராப் பொக்கிஷம் மாயக்கண்ணாடி வெற்றிக்கொடி கட்டு என பல படங்களை சேரன் இயக்கி பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். சிறந்த படங்களை தந்த இயக்குனர் சேரன் தேசிய விருது இரண்டு முறை பெற்றார். இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பல படங்களில் சேரன் நடித்தும் வருகிறார்.

- Advertisement -

விஜய் டிவியில் பிக்பாஸ் டைட்டில் வின்னராக வெற்றி பெற்ற நடிகர் ஆரி அர்ஜூனன் போர்த் ஃப்ளோர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

அந்த விழாவில் இயக்குனர் சேரன் பேசியதாவது, குடும்பத்திலிருந்து பணத்தை எடுத்து சினிமா தாகத்தில் இங்கு கொண்டு வந்து போடுகின்றனர். அந்த பணத்தை மீட்டு எடுப்பதற்கு தயாரிப்பாளர்களுக்கு வழி இருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. மனசாட்சியை அடகு வைத்துக்கொண்டு தயாரிப்பாளரை தெரிந்தே குழிக்குள் தள்ளுகிறோமா என்றால் ஆமாம் என்று ஒத்துக்கொள்ள தான் வேண்டும்.

- Advertisement -

தமிழ்நாட்டில் எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது நம்முடைய ஊரில் டப்பிங் படங்கள் நிறைய வந்து கொண்டிருந்தது. அப்போது தமிழ் படங்கள் காணாமல் போகிற ஒரு மோசமான சூழல் உருவானது. எல்லோரும் ஜாக்கிசான் தமிழ் பேசுவதை ரசித்துப் பார்க்க தொடங்கி விட்டோம். எம்ஜிஆர் அப்போது என்ன பண்ணினார் என்றால் தமிழ் சினிமாவை காப்பாற்ற ஒரு ஆர்டர் போட்டார்.

அதில், எந்த தியேட்டர் என்றாலும் கண்டிப்பாக 90 நாட்கள் தமிழ் படங்கள் போட வேண்டும். அப்படி போடவில்லை என்றால் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்றார். அதுபோல் இன்று சிறிய படங்களுக்கு 3 மாதங்கள் ஒதுக்க வேண்டும். அது எந்த 3 மாதம் என்றாலும் பரவாயில்லை. 9 மாதங்கள் பெரிய படங்கள் வரட்டும். சிறிய படங்கள் வெளியான நேரத்தில் பெரிய படங்கள் வரக்கூடாது. 3 மாதத்தில் 72 சிறிய படங்கள் ரிலீஸாகும். தயாரிப்பாளர்கள் வாழ்வார்கள். இதை அனைவரும் சேர்ந்து அரசிடம் தயக்கமில்லாமல் முறையிட வேண்டும் என்று இயக்குனர் சேரன் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்