- Advertisement -
Homeபொழுதுபோக்குசூப்பர் சான்ஸை மிஸ் செய்த நடிகர் விஜய்… தளபதி கிட்ட யாருமே இதைப்பத்தி சொல்லலையா? -...

சூப்பர் சான்ஸை மிஸ் செய்த நடிகர் விஜய்… தளபதி கிட்ட யாருமே இதைப்பத்தி சொல்லலையா? – புலம்பும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து பிறகு பல வெற்றிப் படங்களை கொடுத்து உச்ச நட்சத்திர நடிகராக மாறியவர் விஜய். அதன்பிறகு அவரது படங்கள் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் ஏதேனும் பிரச்னைகள் எழுந்தது. அதுவே பெரிய அளவில் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது அனைவரும் அறிந்ததுதான்.

இந்த சூழலில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய அவர் 2 ஆண்டுகளாக தமிழக அரசியல் களத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தை ஆளும் திமுக அரசு ஆளுங்கட்சி குறித்தும், மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

- Advertisement -

அதுவும் தன்னுடைய அரசியல் எதிரி திமுக என்றும் கொள்கை எதிரி பாஜக என்றும் தொடர்ந்து மேடைகளில் பேசி வருகிறார். இந்த சூழலில் தான் அவரது கடைசி படம் ஜனநாயகன் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் உருவானது. அந்த படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்த ஓரிரு மாதங்களில் போஸ்ட் புரடக்சன் பணிகளும் நிறைவடைந்தது.

ஆனால் உடனடியாக படத்தை ரிலீஸ் செய்யாமல் முதலில் தீபாவளிக்கு ரிலீஸ் என்றும் அதற்கு பிறகு 2026ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் என்றும் தவெக தலைவர் விஜய் முடிவு செய்தார். அதே நேரத்தில் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வாங்குவதிலும் அலட்சியமாக இருந்து விட்டனர். அதுதான் இப்போது அந்த படத்துக்கே ஆப்பு வைத்து விட்டது.

- Advertisement -

மத்திய மாநில அரசுகளை விஜய் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் சென்சார் போர்டு சரியான நேரத்தில் முட்டுக்கட்டையை போட்டு அந்த படத்தை கடந்த பொங்கலுக்கு வரவிடாமல் தடுத்து விட்டது. இப்போது படத்தின் தயாரிப்பு நிறுவனம் வழக்கை வாபஸ் வாங்கிய நிலையிலும் இன்னும் ரீவைசிங் கமிட்டி படத்தை பார்க்கவில்லை.

அதனால் வருகிற சட்டசபை தேர்தலுக்கு பிறகுதான் இந்த படம் திரைக்கு வர அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதுவும் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ல் இந்த படம் ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் படங்களுக்கு அரசு தரப்பில் நெருக்கடி பிரச்னைகள் உள்ள நிலையில் இப்படி ஜனநாயகன் படத்தை முதலிலேயே ரிலீஸ் செய்யாமல் விஜய் மற்றும் அவருடன் உள்ள நெருங்கிய நண்பர்கள் கோட்டை விட்டுள்ளனர் என்று ரசிகர்கள் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்