- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமரன் படத்தில் நடிக்க கமிட் ஆனபோது… கமல்ஹாசன் சொன்ன அந்த விஷயம் - சீக்ரெட்டை...

அமரன் படத்தில் நடிக்க கமிட் ஆனபோது… கமல்ஹாசன் சொன்ன அந்த விஷயம் – சீக்ரெட்டை போட்டுடைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை சாய்பல்லவி நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டில் தீபாவளிக்கு வெளியான படம் அமரன். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் பெரிய பட்ஜெட்டில் தயாரித்திருந்தார். ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்த இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

கேரளாவில் 70வது பிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய சினிமாவில் சிறந்த திரைப்படங்கள் சிறந்த இயக்குனர்கள் சிறந்த நடிகர்கள் நடிகர்கள் நடிகைகள் பாடகர்கள் இசையமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறந்த கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பிலிம்ஃபேர் விருதுகள் வழங்கப்பட்டன.

- Advertisement -

இதில் அமரன் படத்துக்கு மட்டும் மொத்தம் 8 விருதுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் அமரன் படத்தில் மறைந்த முன்னாள் இராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் கேரக்டரில் நடித்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. இதில் அமரன் படத்தில் நாயகியாக நடித்த சாய் பல்லவிக்கும் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

விருது பெற்ற பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் விழா மேடையில் பேசியதாவது, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு பிலிம்ஃபேர் நிகழ்ச்சிக்கு நடிகர் தனுஷ் உடன் வந்திருந்தேன். ஜாலியாக போயிட்டு வருவோம் வாங்க என்று தனுஷ் என்னை விழாவிற்கு அழைத்து வந்திருந்தார். அப்போது 2வது வரிசையில் எனக்கு இருக்கை வழங்கப்பட்டது.

- Advertisement -

அங்கிருந்து முதல் வரிசையில் இடம் கிடைக்க எனக்கு 13 ஆண்டுகள் ஆகி விட்டது. அமரன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யும்போது கமல்ஹாசன் சார் அலுவலகத்தில் இருந்தேன். அங்கு நிறைய விருதுகள் இருந்தன. அப்போது அவர் என்னிடம் பேசும்போது, எனக்கு இது போதும். இனி இளம் திறமைசாலிகள் விருதுகளை பெற வேண்டும் என்று கூறினார்.

அப்போது எனக்கு அமரன் திரைப்படத்தில் நடித்தால் விருது கிடைக்கும் என்று நினைத்திருந்தேன். அது இப்போது நடந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் கதை தான் இந்த விருது கிடைக்க முக்கிய காரணம். என்னை எவ்வளவு அடித்து தூக்கி வீசினாலும் தொடர்ந்து என்னை தூக்கி பிடிப்பது என் ரசிகர்கள் தான். உங்களுக்கு பிடித்த சிவா அண்ணா இந்த விருதுடன் உங்கள் முன் நிற்கிறேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமாக பேசியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்