தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாகவும் சீனியர் நடிகர்களாகவும் வலம் வருபவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். ஆரம்பத்தில் கமல் பெரிய ஹீரோவாக இருந்த சமயத்தில் அறிமுக நடிகராக வந்த ரஜினியை தனது படங்களில் நடிக்க சம்மதித்தார். இருவரும் இணைந்து நடித்து பல படங்கள் பெரிய வெற்றிகளை பெற்றன.
இருவருமே இயக்குனர் கே பாலசந்தரை தங்களது குருநாதராக ஏற்றுக்கொண்டவர்கள். நடிப்பிலும் நட்பிலும் இன்று வரை அவர்களுக்குள் ஒரு பிணைப்பும் அன்பும் இருந்து வருகிறது. கே பாலசந்தர் மறைவுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த வாழ்க்கை சினிமா வாழ்க்கை அரசியல் வாழ்க்கை என எதுவாக இருந்தாலும் முதலில் பகிர்ந்து கொள்வது தனது நண்பர் ரஜினிகாந்திடம் தான்.
நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கமல்ஹாசன் இருவரும் கடைசியாக சேர்ந்து நடித்த படம் நினைத்தாலே இனிக்கும். கடந்த 1979ம் ஆண்டில் இந்த படம் வெளியானது. அதற்கு பின் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தனர். 47 ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது மீண்டும் ஒரு படத்தில் அவர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக ரெட் ஜெயிண்ட் மூவீஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் மூலம் எப்படியும் ரூ. 1000 கோடி வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் இந்த படம் உருவாகிறது. ஜெயிலர் ஜெயிலர் 2 படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தான் இந்த படத்தை இயக்குகிறார். வழக்கம் போல இந்த படத்துக்கும் அனிருத் தான் இசையமைக்க உள்ளார்.
ரஜினி கமல் இவரும் நடித்த இந்த படத்தின் பிரமோ வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த படத்தில் கமல் ஹீரோவாகவும் ரஜினி வில்லனாகவும் நடிக்கின்றனர் என்ற ஒரு தகவலும் வேகமாக பரவியது. ரஜினியை மீண்டும் வில்லனாக பார்க்க விரும்புகிறோம் என்றும் கமலுக்கு வில்லனாக ஏற்க மாட்டோம் என்றும் ரஜினி ரசிகர்களிடம் இரு வேறுபட்ட கருத்துகள் எழுந்தன.
இந்த சூழலில் தற்போது ஒரு புதிய லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ரஜினி கமல் இருவரில் யாருமே வில்லன் கேரக்டரில் நடிக்கவில்லை. மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டிதான் இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என்கின்றனர். மலையாளத்தில் பிரம்மயுகம் சமீபத்தில் வெளியான களம்காவல் போன்ற படங்களில் வில்லன் நடிப்பில் நடிகர் மம்முட்டி மிரட்டியிருந்தார். ஆனால் இது உறுதி செய்யப்படாத தகவலாக உள்ளது.





