- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட்டக்கத்தியை நம்பி ரூ. 60 கோடியை முதலீடு செய்த இயக்குனர் பா ரஞ்சித் - போட்ட...

அட்டக்கத்தியை நம்பி ரூ. 60 கோடியை முதலீடு செய்த இயக்குனர் பா ரஞ்சித் – போட்ட காசையாவது திரும்ப எடுக்க முடியுமா? வேட்டுவம் படம் லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி மெட்ராஸ் கபாலி காலா சார்பட்டா பரம்பரை போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பா ரஞ்சித். இவர் நீலம் புரடக்சன்ஸ் என்ற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் துவங்கி படங்களையும் தயாரித்து வருகிறார். பா ரஞ்சித் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் தங்கலான் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் வேட்டுவம் என்ற படத்தை ரூ. 60 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருகிறார். அவரே இந்த படத்தை டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் நாயகனாக அட்டக்கத்தி படத்தில் அவர் அறிமுகம் செய்த தினேஷ்தான் நாயகனாக நடிக்கிறார். கடந்தாண்டில் இவர் நடித்த லப்பர் பந்து படம் பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

வேட்டுவம் படத்தில் ஆர்யா வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் நாயகன் அட்டக்கத்தி தினேஷ் என்ற நிலையில் ரூ. 60 கோடி முதலீட்டில் இந்த படத்தை பா ரஞ்சித் சொந்தமாக தயாரித்து அவரே இயக்குவது கோலிவுட் வட்டாரத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் அட்டக்கத்தி தினேஷ் நல்ல நடிகராக இருந்தாலும் ரஜினி விஜய் போல நட்சத்திர நடிகர் கிடையாது.

மேலும் அவர் நாயகனாக நடித்த ஒரு படத்துக்கு ரூ. 60 கோடி முதலீடு என்பது மிகவும் அதிகமாக உள்ளது. மேலும் கமல் ரஜினி அஜீத் சூர்யா தனுஷ் போன்ற முன்னணி நட்சத்திர நடிகர்கள் படங்களே சமீபகாலமாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகின்றன. படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு பலத்த நஷ்டங்களை தந்து வருகின்றன.

- Advertisement -

இந்த சூழலில் ரூ. 60 கோடி பட்ஜெட்டில் வேட்டுவம் படத்தை எடுப்பது போட்ட காசை எடுக்க முடியுமா என்ற ரிஸ்க் தான் இயக்குனர் பா ரஞ்சித்துக்கு ஏற்படும் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக பா ரஞ்சித் நம்பும் ஒரே விஷயம் சயன்டிபிக் தான் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படம் ஒரு விஞ்ஞான படம். அறிவியல் புனைவு கதையாக உருவாகி உள்ளது. 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பெரும்பாலும் விஎப்எக்ஸ் சிஜி தொழில்நுட்ப பணிகளுக்கே அதிகளவில் செலவிடப்பட்டுள்ளது. நிச்சயமாக ஒரு அறிவியல் புனைவு கதையாக தொழில்நுட்பத்தில் இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி பெறும் என்றுதான் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் சொந்த செலவில் தயாரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்