தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். சங்கீதா என்ற மனைவியும் ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். ஜேசன் சஞ்சய் சிம்கா என்ற படத்தை டைரக்ட் செய்து முடித்திருக்கிறார். மகள் திவ்யா சாஷா வெளிநாட்டில் படித்து வருகிறார். விஜய் சங்கீதாவுக்கு திருமணமாகி 27 ஆண்டுகள் ஆகிறது.
இந்நிலையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ளார். நடிகர் விஜயுடன் கில்லி ஆதி குருவி திருப்பாச்சி லியோ ஆகிய படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் திரிஷா. தி கோட் படத்தில் மட்ட ஐட்டம் பாடலுக்கு திரிஷா, விஜயுடன் குத்தாட்டமும் போட்டிருந்தார். லியோ படத்தில் உதட்டு முத்தக்காட்சியிலும் நடித்திருந்தார்.
நட்சத்திர நடிகராக அரசியல் தலைவராக உள்ள தனது கணவர் விஜய்க்கு நடிகை திரிஷாவுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக கூறி சமீபத்தில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். அதில் நடிகை திரிஷா பெயரை குறிப்பிடாமல் தவிர்த்திருந்தார். தேவைப்பட்டால் அவரது பெயரை வழக்கில் சேர்ப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
இது சினிமா வட்டாரத்திலும் தமிழக அரசியல் களத்திலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விஜய் தரப்பில் இருந்து எந்த பதிலும் மறுப்பும் வரவில்லை. இந்நிலையில் நேற்று சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் கல்பாத்தி சுரேஷ் இல்ல திருமண வரவேற்பு விழா நடந்தது. இதில் நடிகர் விஜய் மற்றும் திரிஷா இருவரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
அதுவும் ஒரே காரில் ஒரே கலரில் பட்டாடை அணிந்து அங்கு வந்த விஜய் – திரிஷா இருவரும் மேடையேறி வந்து மணமக்களை பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். புதுமண தம்பதி போல இருவரும் ஒரே விதமான நிறத்தில் பளபளக்கும் பட்டாடையில் மகிழ்ச்சியான முகத்துடன் காணப்பட்டனர். இந்த காட்சியை பார்த்த பலரும் திடுக்கிட்டு போய்விட்டனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் விஜய் ரசிகர்களும் தவெக கட்சியினரும் பலத்த அதிர்ச்சி அடைந்தனர். இது மனைவி சங்கீதாவை வெறுப்பேற்றும் விஜயின் செயலா? எந்த விமர்சனம் வந்தாலும் என் இஷ்டம்படி தான் வாழ்வேன் என்று தவெக கட்சி நிர்வாகிகளுக்கு அவர் சொல்லும் பதிலா என்று தெரியவில்லை. ஆனால் உண்மையில் விஜய் மீதான இமேஜ் இந்த வீடியோவால் தமிழக மக்கள் மத்தியில் தாறுமாறாக கீழே சரிந்துவிட்டது என்பது தான் உண்மை.





