- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவருடன் 16 படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்து விட்டேன்… அவரை சகித்துக்கொண்டு நடிக்க முடியாது...

அவருடன் 16 படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்து விட்டேன்… அவரை சகித்துக்கொண்டு நடிக்க முடியாது – நடிகர் வடிவேலு குறித்து ஓபனாக பேசிய நடிகை சோனா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் சின்ன சின்ன காமெடி ரோல்களில் நடித்தவர் நடிகை சோனா ஹைடன். சில படங்களில் கவர்ச்சியான கேரக்டர்களிலும் சோனா நடித்திருக்கிறார். பி வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த குசேலன் படத்தில் நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக சோனா நடித்திருந்தார்.

இந்த படத்தில் சலூன் கடைக்காரர் சண்முகம் கேரக்டரில் வடிவேலுவும் அவரது மனைவியாக பிடி டீச்சர் கேரக்டரில் சோனாவும் இணைந்து நடித்திருந்தது ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் வடிவேலு சோனா ஜோடி தொடர்ந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை.

- Advertisement -

இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை சோனா வெளிப்படையாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அப்போது நடிகை சோனா கூறியதாவது, குசேலன் படத்தில் வடிவேலுவுடன் நான் இணைந்து நடித்தேன். எங்கள் காமெடி காட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நடிகர் வடிவேலுவுடன் நடிப்பதற்கு மட்டும் 16 படங்களுக்கு எனக்கு வாய்ப்பு தேடி வந்தது.

ஆனால் அதை எதையுமே நான் ஒப்புக்கொள்ளவில்லை. அந்த படங்களில் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டேன். அதற்கு காரணம் வடிவேலுவை சகித்துக் கொண்டு நடிப்பது என்பது ரொம்பவுமே கஷ்டமான ஒன்று. அது மட்டுமல்ல, யார் ஒருவரும் அவரை எளிதாக கையாண்டு விட முடியாது. அதுபோல இன்னும் வெளியே சொல்ல முடியாத பல விஷயங்கள் இருக்கின்றன.

- Advertisement -

என்னை பொறுத்தவரை எனக்கு சுயமரியாதை தான் முதலில். மற்றதெல்லாம் அப்புறம்தான் என்று நடிகை சோனா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். நடிகை சோனா மட்டுமின்றி நடிகை ஆர்த்தி போன்ற இன்னும் சில காமெடி நடிகைகளும் நடிகர் வடிவேலு குறித்து எதிர்மறை கருத்துகளை கூறியிருக்கின்றனர். குறிப்பாக சக நடிகைகளுக்கு பலவிதங்களில் அவர் உடல் ரீதியான மனரீதியாக தொல்லை கொடுப்பார் என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.

நடிகர் வடிவேலுடன் இணைந்து நடிக்கும் காமெடி துணை நடிகர்கள் சிலரும் நடிகர் வடிவேலு தங்களுக்கு செய்த பிரச்னைகள் குறித்தும் அவரது அடாவடியான செயல்பாடுகள் குறித்தும் வெளிப்படையாக கூறியிருக்கின்றனர். தயாரிப்பாளர்கள் அவர்களுக்கு சம்பளத்தை கூட குறைக்க சொன்னதாகவும் போண்டாமணி பெஞ்சமின் போன்ற காமெடி நடிகர்கள் கூறிய நிலையில் இப்போது கவர்ச்சி நடிகை சோனாவும் நடிகர் வடிவேலு குறித்து நெகட்டிவ் ஆக பேசியிருப்பது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்