- Advertisement -
Homeபொழுதுபோக்குஆதிக் ரவிச்சந்திரனுக்கு டிமிக்கி கொடுத்த நடிகர் அஜீத்குமார் - ஏகே 64 படத்தில் இயக்குனர் இவர்தான்...

ஆதிக் ரவிச்சந்திரனுக்கு டிமிக்கி கொடுத்த நடிகர் அஜீத்குமார் – ஏகே 64 படத்தில் இயக்குனர் இவர்தான் – வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான படங்கள் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி. இதில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி படம் பெரிய வெற்றியை பெற்றதால் தனது அடுத்த படம் ஏகே 64 படத்தை இயக்கும் வாய்ப்பையும் அவருக்கு மீண்டும் அஜீத்குமார் வழங்கினார். ஆனால் கார் ரேஸ்சில் அஜீத்குமார் முழு கவனமும் செலுத்தியதால் கடந்த ஆண்டு முழுவதும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை.

இந்த சூழலில் நடிகர் அஜீத்குமார் தனது சம்பளமாக 186 கோடி ரூபாய் கேட்ட நிலையில் இந்த படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. இதனால் பல மாதங்களாக ஏகே 64 படப்பிடிப்பு துவங்கப்படாமல் தாமதம் நீடிக்கிறது. இதற்கிடையே 2027 வரை அஜீத்குமார் கார் ரேஸில் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

எப்படியும் மீண்டும் அஜீத்குமார் படத்தை இயக்கப் போகிறோம் என்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு ஆண்டுக்கு மேலாக காத்திருந்த நிலையில் இப்போது அஜீத்குமார் ஒரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். ஏகே 64 படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் சிறுத்தை சிவாவுக்கு அவர் தந்திருப்பதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே அஜீத்குமார் நடித்த வீரம் விவேகம் விஸ்வாசம் வேதாளம் போன்ற படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. இதில் விவேகம் படத்தை தவிர மற்ற 3 படங்களுமே நல்ல வரவேற்பை வசூலை குவித்த படங்களாக இருந்தன. ஆனால் அடுத்து சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த கங்குவா போன்ற படங்கள் மிக மோசமான விமர்சனங்களில் சிக்கியது. குறிப்பாக சூர்யா நடித்த கங்குவா படம் சிறுத்தை சிவா மீது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்த சூழலில் சிறுத்தை சிவா கடந்த 2 ஆண்டுகளாக எந்த பட வாய்ப்பும் இல்லாமல் தவித்து போயுள்ளார். எந்த தயாரிப்பாளரும் அவரை வைத்து படம் தயாரிக்க முன்வரவில்லை. சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தும் சிறுத்தை சிவா பேசியிருக்கிறார். ஆனால் ரஜினி தரப்பில் இருந்தும் சரியான ரிப்ளை இல்லாத நிலையில் அஜீத்குமாரை சமீபத்தில் சிறுத்தை சிவா சந்தித்துள்ளார்.

கங்குவா படத்துக்கு பிறகு தனக்கு பட வாய்ப்புகளை யாரும் தர மறுப்பதாகவும் தனக்கு மதிப்பு தர மறுப்பதாகவும் மன ரீதியாக மிகவும் கஷ்டப்படுவதாகவும் உருக்கமாக அவர் பேசியிருக்கிறார். இதனால் நெகிழ்ந்து போன நடிகர் அஜீத்குமார், ஏகே 64 படத்தை நீங்கள்தான் டைரக்ட் செய்கிறீர்கள். என்னுடைய அடுத்த படம் உங்களுடன்தான் என்று கூறியிருக்கிறார். அதனால் பல மாதங்களாக காத்திருந்த ஆதிக் ரவிச்சந்திரனுக்கு ஏகே 64 படம் இயக்க வாய்ப்பில்லை என்று உறுதியாகி விட்டது.

- Advertisement -

சற்று முன்