- Advertisement -
கடந்த 15ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 திரைப்படம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து வசூலில் முன்னிலையில் இருந்து வருகிறது. படம் வெளியாகி 16 நாட்களில் இந்தியாவில் மொத்தமாக 500 கோடி ரூபாய் வசூலை தாண்டியிருப்பதாகவும் வெளிநாடுகளில் 260 கோடி வசூலித்து உலகம் முழுவதும் மொத்தம் 760 கோடி ரூபாய் வசூலித்து தமிழ் சினிமா வரலாற்றில் பிரமாண்ட சாதனை படைத்துள்ளது.





