தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் நடிகைகள் இருந்தாலும் அதில் சிலர் பிரச்னைக்குரிய நபர்களாக கூறப்படுகின்றனர். காரணம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு கட்டுப்படாமல் அவர்கள் நடந்து கொள்வதும் குறித்த நேரத்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வராமல் தவிர்ப்பதும் கால்ஷீட் தந்த தேதியில் காணாமல் போய்விடுவதும் நடக்கிறது.
இந்த வரிசையில் கடந்த 1990களில் பெரிய அளவில் சர்ச்சையில் சிக்கியவர் நவரச நாயகன் நடிகர் கார்த்திக் தான். தயாரிப்பாளர் இயக்குனர் மீது கோபம் என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வராமல் ஏதாவது ஒரு ஓட்டலில் சென்று தங்கி விடுவது கார்த்திக்கின் வழக்கம். இங்கே ஷூட்டிங் ஸ்பாட்டில் கார்த்திக்காக காத்திருந்து நாள் முழுவதும் நொந்து போன இயக்குனர், தயாரிப்பாளர் கதைகள் நிறைய இருக்கின்றன.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் இளம் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் அதர்வா. இவர் செய்த தவறுக்காக ரெட் கார்டு தரப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் அதர்வா நடித்த செம போதை ஆகாதே படத்தில் 6 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் புகார் செய்தார். அதற்காக அதர்வாவுக்கு ரெட் கார்டு தரப்பட்டது.
கொடுத்த கால்ஷீட்டு டைம்ல அதர்வா நடிக்க போகாததால் இந்த நஷ்டம் ஏற்பட்டதாக அவர் புகாரில் கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் 2023ல் அதா்வாவுக்கு ரெட் கார்டு தரப்பட்டுள்ளது. அடுத்து நடிகர் தனுஷ் தேனாண்டாள் பிலிம்ஸ் படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிட்டு கால்ஷீட் தராததால் தனுஷூக்கு 2024 ஜூலை மாதம் ரெட் கார்டு தரப்பட்டுள்ளது.
அடுத்ததாக நடிகர் சிம்பு டிரிப்பிள் ஏ படத்தில் நடித்த வகையில் 20 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் புகார் செய்துள்ளார். இந்த படத்துக்காக 60 நாட்கள் தேதி தந்துவிட்டு 27 நாட்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு சிம்பு வந்ததாகவும் புகார் சொல்லப்பட்டுள்ளது. அத்துடன் டப்பிங் எல்லாமே வீட்டில் இருந்து சிம்பு வாட்சப்பில் பதிவு செய்து அனுப்பியதாகவும அந்த புகாரில் தொிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் கடந்த 2017ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை எந்த படங்களிலும் நடிக்க கூடாது என்று ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 2018ம் ஆண்டில் செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பின் போது மட்டும் தற்காலிகமாக ரெட் கார்டு ரிலீஸ் செய்யப்பட்டு சிம்பு நடிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இப்படி அதர்வா 3ம் இடம் தனுஷ் 2ம் இடம் சிம்பு முதலிடம் என ரெட் கார்டு தரப்பட்டது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.





