- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவாவால் நொந்து போன சூர்யா ரசிகர்களுக்கு பொங்கலுக்கு காத்திருக்கிறது சிறப்பான அறிவிப்பு... அப்புறம் என்ன பண்டிகையை...

கங்குவாவால் நொந்து போன சூர்யா ரசிகர்களுக்கு பொங்கலுக்கு காத்திருக்கிறது சிறப்பான அறிவிப்பு… அப்புறம் என்ன பண்டிகையை கொண்டாடுங்கடே….

- Advertisement -

சூர்யா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் திரிஷா, லப்பர் பந்து நாயகி சுவாசிகா, மலையாள நடிகர் இந்திரன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். வித்தியாசமான இந்த காம்போவால் படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

 

- Advertisement -

இதன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் உள்ள மாசாணியம்மன் கோவிலில் தொடங்கியது. தொடர்ந்து கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இதனை படமாக்கி வருகிறார்கள். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடி ஏதும் கிடையாதாம். திரிஷா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் வருகிறாராம்.

 

- Advertisement -

ஆன்மீகம் கலந்த ஃபேண்டஸி கதையாக இது உருவாவதாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, சூர்யாவின் 44வது திரைப்படத்தை, வெள்ளி திரைக்கு கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் கார்த்தி சுப்பராஜ். இந்தப் படத்திற்கு கல்ட் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கோடை விடுமுறைக்கு இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதில் காதலும் ஆக்சனும் கலந்து இருக்கும் என்று ஏற்கனவே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியிருந்தார். அந்தமான் ஊட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இது படமாக்கப்பட்டது. பூஜா ஹெக்டே இதில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

 

இப்படியான சூழலில், சூர்யா ஹிந்தியில் நடிக்க இருந்த கர்ணன் திரைப்படம் திடீரென டிராப்பானது. அதேசமயம் வெற்றிமாறனுடன் அவர் இணைய இருக்கும் வாடிவாசல் திரைப்படம் என்ன ஆனது என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். தான் மேடை ஏறும் நிகழ்ச்சிகளில் எல்லாம் வெற்றிமாறனிடம் இந்த கேள்வியை பலரும் முன் வைக்க அவர் நிச்சயம் வாடிவாசல் எடுக்கப்படும் என்று கூறி வந்தார்.

 

தற்போது வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டார். வரும் இருபதாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து வாடி வாசலில் முழுக்க முழுக்க கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் வெற்றிமாறன். இதற்கான அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது. அது மட்டுமல்ல மார்ச் மாதம் படப்பிடிப்பை தொடங்க தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்