- Advertisement -
Homeபொழுதுபோக்குதேர்தல் பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய் குறித்து விமர்சனம் செய்வீர்களா? - மதுரை மத்திய தொகுதி...

தேர்தல் பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய் குறித்து விமர்சனம் செய்வீர்களா? – மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் இயக்குனர் சுந்தர் சி சொன்ன அதிரடி பதில்!

- Advertisement -

உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சுந்தர் சி. காமெடி காதல் கவர்ச்சி பேமிலி சென்டிமென்ட் ஜானரில் அடங்கிய பல வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர்.

நடிகை குஷ்புவை காதல் திருமணம் செய்துக்கொண்ட இயக்குனர் சுந்தர் சி பல படங்களில் நாயகனாகவும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். இவரது அரண்மனை சீரிஸ் திகில் படங்களுக்கு தொடர்ந்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அடுத்ததாக அரண்மனை 5 படத்தை உருவாக்க அவர் தயாராகி வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி அவரது மனைவி குஷ்பூவை போலவே அரசியலுக்கு இப்போது வந்து விட்டார். அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக் கட்சி வேட்பாளராக மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் முன்னாள் திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள நடிகை குஷ்பு இந்த முறை தேர்தலில் போட்டியிட பாஜக தலைமை வாய்ப்பு தரவில்லை. அதே நேரத்தில் அவரது கணவர் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவின் சின்னம் இரட்டை இலையில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. ஏசி சண்முகம் சுந்தர் சியின் நெருக்கமான நண்பர் என்பதால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் குறித்து விமர்சனம் செய்து பிரசாரம் செய்வீர்களா என்று கேட்டதற்கு வேட்பாளர் இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, விஜயை என்னுடைய மனைவி ஒரு தம்பியாக தான் கருதுகிறார். அவரும் என் மனைவியை அக்கா என்றுதான் அன்பாக கூப்பிடுகிறார். அதனால் எந்த வகையிலும் அவரை பற்றி விமர்சிக்கவோ அவர் கட்சியை பற்றி பேசவோ அவங்க வேட்பாளர் பற்றி சொல்லவோ நான் தயாராக இல்லை.

ஆனால் மதுரை மத்திய தொகுதியை பொருத்த வரை போட்டி இரட்டை இலைக்கும் உதய சூரியனுக்கும் தான். அது விஷயமாக பிரசாரத்தில் பேசினால் பெட்டராக இருக்கும். நான் என் மனைவிக்கு பிரசாரம் செய்திருக்கிறேன். அதனால் கண்டிப்பாக அவரும் எனக்காக பிரசாரம் பண்ணுவார் என்று அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர் சி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்