- Advertisement -
Homeபொழுதுபோக்குபலமுறை சொல்லியும் கண்டுகொள்ளாத அப்பா - தனிக்குடித்தனம் சென்றாரா நடிகர் விக்ரம் பிரபு? அன்னை இல்லத்தில்...

பலமுறை சொல்லியும் கண்டுகொள்ளாத அப்பா – தனிக்குடித்தனம் சென்றாரா நடிகர் விக்ரம் பிரபு? அன்னை இல்லத்தில் நடந்தது என்ன?

- Advertisement -

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இல்லம் தி நகர் போக் ரோட்டில் உள்ளது. இங்கு தான் சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார் நடிகர் பிரபு உள்ளிட்டோர் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். நடிகர் பிரபு மகன் விக்ரம் பிரபுவும் திருமணமான நிலையில் மனைவி பிள்ளைகளுடன் இங்கு வசித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் பிரபுவின் அண்ணன் ராம்குமார் திரைப்பட தயாரிப்பாளராக உள்ளார். மேலும் ஷங்கர் இயக்கிய ஐ படத்திலும் ஆர்ஜே பாலாஜி நடித்த எல்கேஜி உள்ளிட்ட சில படங்களிலும் அவர் நடித்திருந்தார். ஆனால் அவரது தம்பி பிரபு அளவுக்கு சினிமாவில் ராம்குமாருக்கு பெரிய வாய்ப்புகள் இல்லை.

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள சூழலில் பெரிய நட்சத்திர நடிகர்களுக்கே கதை இல்லாமல் படவாய்ப்பு இல்லாமல் வருடத்திற்கு ஒரு படத்தை வைத்துக்கொண்டு திண்டாடிக் கொண்டு இருக்கின்றனர். இந்த நேரத்தில் ராம்குமாரின் மகனுக்கும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர்கள் பெரிதாக யோசிக்கவும் இல்லை.

இருந்தாலும் தனது அண்ணனுக்காக பிரபு தொடர்ந்து பொருளாதார ரீதியாக பல உதவிகளை செய்து வருகிறார். இது பல ஆண்டுகளாக தொடர்கிறது. இதுகுறித்து நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு இதற்கு முத்துக்கட்டை போடுவதாக கூறப்படுகிறது. எத்தனை நாளைக்குதான் அண்ணன் குடும்பத்துக்கு இப்படியே பணம் கொடுத்து காப்பாற்றுவீர்கள்?

- Advertisement -

நீங்கள் இப்படி அள்ளி அள்ளி தருவதால்தான் அவர்கள் ஊதாரித்தனமாக பொறுப்பின்றி செலவு செய்து கொண்டு இருக்கிறார்கள். அதனால் இனிமேல் பணம் கொடுக்கக் கூடாது என்று விக்ரம் பிரபு பலமுறை பிரபுவிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். ஆனால் பிரபு, என்னுடைய அண்ணனை நான் நிச்சயமாக கைவிட்டு விட முடியாது என்று கூறி மறுத்து வருகிறார்.

மேலும் நான் குடும்ப சொத்திலிருந்து பணத்தை எடுத்து அண்ணனுக்கு கொடுக்கவில்லை. நான் நடித்து சம்பாதித்த பணத்தில் இருந்து தான் அவருக்கு பணம் தருகிறேன் என்றும் பிரபு சொல்லியிருக்கிறார். இதனால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விக்ரம் பிரபு, அப்பா பிரபுவிடம் கோபித்துக்கொண்டு அன்னை இல்லத்தை விட்டு வெளியேறி அடையாறில் தனி குடித்தனம் சென்று விட்டார் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்