- Advertisement -
Homeபொழுதுபோக்குஎஸ்டிஆர் 49ஆவது படத்தில் சந்தானத்திற்காக சிம்பு இப்படி பேசினாரா... அட நம்பவே முடியலையே... இது தான்டா...

எஸ்டிஆர் 49ஆவது படத்தில் சந்தானத்திற்காக சிம்பு இப்படி பேசினாரா… அட நம்பவே முடியலையே… இது தான்டா நட்புகழகு…

- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாக சிம்புவுக்கு எந்த திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகாமல் உள்ளது. தற்போது அவர் தக் லைப் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். மணிரத்னம் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில், கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் வருகிறார். சிலம்பரசனுக்கும் இதில் முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

வரும் ஜூன் மாதம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் சிம்பு தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி இருக்கிறார். இதில் அவரது ஐம்பதாவது திரைப்படம் மிகப்பிரமாண்டமான முறையில் எடுக்கப்படுகிறது. இதனை அவரே தயாரிக்க இருக்கிறார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கிய, தேசிங்கு பெரியசாமி இதனை எடுக்க உள்ளார். வரலாற்று ரீதியில் இந்த திரைப்படம் உருவாக இருக்கிறது. இதனை தொடர்ந்து அவர் அஸ்வந்த் மாரிமுத்துடன் இணைய இருக்கிறார். இதனை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

காதல் கலந்த பேண்டஸி கதையாக இது உருவாகிறது. முன்னதாக சிலம்பரசன் தற்போது தனது 49 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். பார்க்கிங் திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த ராம்குமார் தான் இதன் இயக்குனர். பொறியியல் கல்லூரி மாணவராக நடிக்கும் சிலம்பரசனுக்கு, கேங்ஸ்டர் என்னும் மறுமுகமும் இருக்கிறது என்பதை மையப்படுத்தி தான் இதன் கதை நகர்கிறதாம்.

இதில் கதாநாயகியாக கயாடு லோகர் நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது சந்தானம் இடம்பெற்றிருப்பது தான். கதாநாயகனாக மட்டுமே நடித்து வரும் அவர் திடீரென சிம்புவுடன் கைகோர்த்து இருக்கிறார். இதற்குப் பின்னணியில் நடந்த சில விஷயங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

அதாவது கதையைக் கேட்கும் போதே சந்தானம் இதில் இருக்க வேண்டும் என்றால் அவருக்கு மிகுந்த முக்கியத்துவமும் பங்களிப்பும் உள்ள ரோல் தான் எழுதப்பட வேண்டும் என்று சிம்பு சொல்லி இருக்கிறாராம். அதற்கு ஏற்றப்படியே சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாக்கப்பட, சிம்பு கேட்டுக் கொண்டதும் உடனே நடிக்க சந்தானம் சம்பாதித்து விட்டாராம். தற்போது சந்தானம், டிடி ரிட்டன்ஸ் படத்தின் அடுத்த பாகத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

சற்று முன்