- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் குறித்த கேள்விக்கு பதில் தர மறுப்பு - அந்த விஷயங்கள் மட்டும் வேண்டாம், அட்வைஸ்...

ஜனநாயகன் குறித்த கேள்விக்கு பதில் தர மறுப்பு – அந்த விஷயங்கள் மட்டும் வேண்டாம், அட்வைஸ் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு ஏறக்குறைய முடியும் தருவாயில் உள்ளது. இதையடுத்து நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் ஒரு படத்தில் ரஜினி நடிக்கிறார். தலைவர் 173 என்ற இந்த படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி டைரக்ட் செய்கிறார். நடிகைகள் சாய்பல்லவி ஷோபனா நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் விஜய் இடையே யார் சூப்பர் ஸ்டார் என்ற பஞ்சாயத்து சில ஆண்டுகளுக்கு ஏற்பட்டு பெரிய விவகாரமாக மாறியது. அதில் இருந்தே ரஜினி குறித்து விஜயும் விஜய் குறித்து ரஜினியும் எதுவும் பேசுவது இல்லை. சமீபத்தில் தவெக மூத்த நிர்வாகி ஆதவ் அர்ஜூனா நடிகர் ரஜினி குறித்து விமர்சனம் செய்து பேசினார். அதற்கு பிறகு மன்னிப்பும் கேட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையத்துக்கு வந்த நடிகர் ரஜினிகாந்தை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது ஜனநாயகன் படம் வெளியாகாமல் இருப்பது, நடிகர் விஜய் பிரசார வாகனத்தை பின் தொடர்ந்து செல்லும் இளைஞர்கள் விபத்தில் சிக்குவது, இளைஞர்களுக்கான அறிவுரை மற்றும் கமலுடன் ரஜினி இணைந்து நடிக்க உள்ள படம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது, ஜனநாயகன் திரைப்படம் குறித்த கேள்விக்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. நோ கமெண்ட்ஸ். நடிகர்கள் பின்னால் சென்று கீழே விழுந்து காயம்பட்டால் அது உங்களுக்குத்தான் ஆபத்து. இளைஞர்கள் தான் மிகவும் ஜாக்கிரதியாக இருக்க வேண்டும்.

படிக்கிற வயதில் படிப்பில் மட்டுமே முழுமையான கவனம் செலுத்த வேண்டும். படிக்கும் நேரத்தை தவற விட்டு விட்டால் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட நேரிடும். தயவு செய்து குடிப்பழக்கம் கஞ்சா போன்ற போதைப் பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாகக் கூடாது. அது வாழ்க்கையை நரகமாக்கி விடும். அப்படிப்பட்ட போதைப் பொருட்கள் பழக்கம் கொண்ட நண்பர்களை விட்டு விலகி இருங்கள். அவர்கள் கிட்டயே நெருங்க விடாதீர்கள்.

மனிதர்களுக்கு உடல் ஆரோக்கியம் தான் ரொம்ப முக்கியம். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறையும் கவனமும் செலுத்த வேண்டும். நானும் கமலும் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்