தமிழ் சினிமாவில் கடந்த 1980 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை அம்பிகா. ரஜினி கமல்ஹாசன் விஜயகாந்த் மோகன் கே பாக்யராஜ் சத்யராஜ் என அன்றைய நட்சத்திர ஹீரோக்களுக்கு நாயகியாக நடித்தவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் ஜோடியாக நடித்தவர்.
குறிப்பாக சகலகலா வல்லவன் உயர்ந்த உள்ளம் காக்கிச்சட்டை படிக்காதவன் அந்த 7 நாட்கள் இதயகோவில் என பல சூப்பர் ஹிட் படங்களில் நாயகியாக அம்பிகா நடித்திருந்தார். மலையாளத்திலும் நிறைய படங்களில் அம்பிகா நடித்தார். அம்பிகா போலவே அவரது தங்கை ராதாவும் அப்போது முன்னணி நடிகையாக கோலிவுட்டில் வலம் வந்தார்.
இப்போது 60 வயதுகளை கடந்த அம்பிகா டிவி சீரியல்களில் நடிக்கிறார். டிவி ரியாலிடி ஷோ நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்கிறார். அவ்வப்போது தனக்கு தகுந்த நல்ல கேரக்டர்களில் அம்மா அத்தை அண்ணி பாட்டி போன்ற கேரக்டர்களிலும் தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய சீனியர் நடிகை அம்பிகா கூறியதாவது, யூடியூப் சேனல்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் தவறானவர்கள். ரொம்ப தவறானவர்கள். ஏன் என்றால் அவர்களுக்கு மனித பக்கமே இல்லை. ரொம்பவும் வல்காரிட்டியோடு பேசுகிறார்கள். அவர்கள் பெயரை சொல்ல வேண்டும் என ஆசையாக இருக்கிறது. ஆனால் நேரில் பார்க்கும்போது சொல்லிக் கொள்கிறேன்.
என்னை நல்லவள் என்று சொல்வதால் நான் நல்லவள் ஆகிவிட மாட்டேன். கெட்டவள் என சொல்வதால் கெட்டவள் ஆகிவிட மாட்டேன். வீட்டில் பிரச்சனை இருப்பவர்கள் கெட்டதை பேசுவார்கள். எனக்கு திரைப்படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போது இல்லை. அதேசமயம் லேட்டஸ்டாக யூடியூப் சேனல் ஆரம்பித்த பிறகு குறும்படங்கள் இயக்க ஆசைப்படுகிறேன். எனது மணவாழ்க்கை முடிவுக்கு சினிமா ஒரு காரணம் இல்லை. எந்தத் துறையில் இருந்தாலும் இரண்டு பேருக்குள் செட் ஆகவில்லை என்றால் அது முடிந்துவிடும்.
எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் பிரிய வேண்டும் என்றால் பிரிந்துதான் ஆக வேண்டும். அரசியலில் இருக்கும் 2 பேர் பிரிந்தால் அரசியல் காரணம் இல்லை. அதேபோல் சினிமாவும் காரணம் இல்லை. நானும் அந்த நபரும் மட்டும்தான் காரணம். நான் இந்த துறையில் ஒரு அளவுக்கு புத்திசாலித்தனத்தோடு நடந்திருக்கிறேன் என்று அந்த நேர்காணலில் அம்பிகா கூறியிருக்கிறார். கடந்த 1996ம் ஆண்டு திருமண செய்து கொண்ட அம்பிகா 2 ஆண்டுகள் கணவருடன் வாழ்ந்து விட்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.





