- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி ரசிகர்களால் கனவு நனவாகுமா? சன் பிக்சர்ஸ் போடும் திட்டம் பலிக்குமா? - ஜெயிலர் 2...

ரஜினி ரசிகர்களால் கனவு நனவாகுமா? சன் பிக்சர்ஸ் போடும் திட்டம் பலிக்குமா? – ஜெயிலர் 2 படம் ரிலீஸ் தள்ளிப் போக அதிக வாய்ப்பு!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த மாத இறுதியில் தலைவர் 173 என்ற தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளா். சென்னை பூந்தமல்லியில் உள்ள சுந்தர் ஸ்டுடியோவில் இந்த படப்பிடிப்பு நடக்கிறது. 75 சதவீத படப்பிடிப்பு இங்குதான் நடத்தப்பட உள்ளது. இது ஒரு ஃபேமிலி டிராமா கதைக்களத்தில் உருவாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் 2023ம் ஆண்டில் வெளியான படம் ஜெயிலர். இந்த படம் 600 கோடி ரூபாய்க்கு வசூலை அள்ளிய நிலையில் இந்த படத்தின் 2ம் பாகத்தை எடுக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன்வந்தது. மேலும் ஜெயிலர் பட வெற்றிக்காக ரஜினி நெல்சன் அனிருத் ஆகியோருக்கு 3 சொகுசு கார்களை படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசாக வழங்கினார்.

- Advertisement -

ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய முடிவடைந்த நிலையில் பேட்ச் ஒர்க் காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டன. இந்த படத்தில் மலையா நடிகர் மோகன்லால் இந்தி நடிகர் ஷாருக்கான் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் எஸ்ஜே சூர்யா சந்தானம் யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் இதுவரை எந்த படமும் ரூ. 1000 கோடி வசூலை எட்டியது இல்லை. அதற்கான வாய்ப்பு ரஜினி அல்லது விஜய் படங்களுக்கு மட்டுமே இருப்பதாக தமிழ் சினிமா ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் இப்போது விஜய் நடித்த ஜனநாயகன் படம் இணையத்தில் லீக் ஆகி விட்டது. படம் ரிலீஸ்சும் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. விஜயும் அரசியலுக்கு வந்து விட்டதால் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார்.

- Advertisement -

அதனால் பான் இந்தியா படமாக உருவாகி வரும் ஜெயிலர் 2 படம் 1000 கோடி ரூபாய் வசூலை அள்ளும் என்று ரஜினி ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் மல்டி ஸ்டார்ஸ் நடித்துள்ள படம் என்பதால் மற்ற மொழிகளிலும் இந்த படத்துக்கு பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைக்கும் என்றும் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் 2 படம் ரூ. 2000 கோடி வசூலிக்கும் பெரிய படமாக இருக்க வேண்டும் என்று திட்டம் போடுகிறது. அதனால் மற்ற பான் இந்தியா படங்கள் குறுக்கீடு எதுவும் இல்லாத வகையில் ஜெயிலர் 2 படம் திரைக்கு வர வேண்டும். அப்படிப்பட்ட நாளில் இந்தியா உட்பட உலகம் முழுவதும் இந்த படத்தை ரிலீஸ் செய்தால் ரூ. 2000 கோடி தட்டி தூக்கி விடலாம் என்று கருதுகிறது. அதனால் ஜெயிலர் 2 ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்று தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்