நல்ல கதை திரைக்கதை கதைக்களம் என கண்டென்ட்டை நம்பாமல் அது நல்ல கன்டென்ட் எதுவுமே இல்லாமல் ஹீரோவை நம்பி படம் எடுக்கும் இயக்குனர்களால் தயாரிப்பாளர்களால் தமிழ் சினிமா அதல பாதாளத்துக்கு வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இப்படியே போனால் தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு ஒரு படம் கூட ஜெயிக்காது என்கிற ஆபத்து உருவாகி விடும்.
கடந்த சில ஆண்டுகளாவே தமிழ் சினிமாவில் 250 முதல் 300 படங்கள் வரை வெளியாகும் நிலையில் 10 படங்கள் கூட அதில் பெரிய வெற்றிப் படங்களாக இருப்பதில்லை. அதுவும் பெரிய பட்ஜெட்டில் எடுத்த படங்கள் 100 கோடி ரூபாய் வசூலிக்கின்றன. அதுவும் ரஜினி கமல் விஜய் சூர்யா தனுஷ் படங்களாக தான் இருக்கின்றன.
இந்த 2026ம் ஆண்டில் மார்ச் வரை 3 மாதங்கள் கடந்த நிலையில் தமிழில் 70 படங்கள் வெளிவந்துள்ளன. இதில் பெரிய முன்னணி நட்சத்திரங்கள் ரஜினி கமல் விஜய் அஜீத்குமார் சூர்யா தனுஷ் படங்கள் எதுவும் வெளிவராத நிலையில் டாப் வசூல் செய்த படங்கள் வெறும் 5 தான். இதில் ஒரு படம் ரி ரிலீஸ் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான தலைவர் தம்பி தலைமையில் படம் பொங்கலுக்கு வெளியானது. இந்த படம் நிதிஷ் சஹாதேவ் என்கிற மலையாள இயக்குனர் இயக்கிய படமாகும். இந்த மொத்தம் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளிய நிலையில் நடிகர் ஜீவாவுக்கும் இது கம்பேக் படமாக இருந்தது.
டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடித்த படம் வித் லவ். இந்த படம் ரூ. 40 கோடி வரை வசூலித்தது. அதே போல் கென் கருணாஸ் ஹீரோவாக இயக்கிய அவரே கதாநாயகனாக நடித்த யூத் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படம் 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளியுள்ளது. இது கென் கருணாஸ் இயக்கிய முதல் படம், முதன் முதலாக அவர் ஹீரோவாக அறிமுகமான படம் என்பதும் கவனிக்கத்தக்கது.
அதே போல் அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் பவுனுத்தாயி கேரக்டரில் நடித்த தாய்கிழவி படம் ரூ. 75 கோடி வசூலை அள்ளியுள்ளது. இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இந்த படம் 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி இவ்வளவு பெரிய வசூலை அள்ளியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அஜீத்குமார் நடித்த மங்காத்தா படமும் ரி ரிலீஸாகி ரூ. 30 கோடி வரை அள்ளியிருக்கிறது.





