- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவர் 173 படத்தை அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்வதில் எழுந்த சிக்கல் - ரஜினி படத்துக்கே...

தலைவர் 173 படத்தை அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்வதில் எழுந்த சிக்கல் – ரஜினி படத்துக்கே இத்தனை சோதனைகளா? அப்செட் ஆன ரசிகர்கள்!

- Advertisement -

ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் தலைவர் 173 என்ற அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி ஷோபனா உள்ளிட்டோர் நடிப்பதாகவும் வருகிற 2027 பொங்கலுக்கு ரிலீஸ் என்றும் தகவல் வெளியானது.

முதலில் இந்த படத்தை இயக்க கமிட் ஆனவர் சுந்தர் சி. ஆனால் அவர் திடீரென விலகிய நிலையில் டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி கமிட் செய்யப்பட்டார். இந்த மாத இறுதியில் ஷூட்டிங் துவங்கும் என கூறப்பட்ட நிலையில் அவரும் இந்த படத்தை விட்டு வெளியேறி விட்டார்.

- Advertisement -

இப்போது டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்க கமிட் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவரும் இந்த படத்தை இயக்குவாரா என்பதில் குழப்பமும் சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அதனால் தலைவர் 173 படப்பிடிப்பு குறிப்பிட்ட தேதியில் துவங்குமா என்பதே கேள்விக்குறியாக மாறியுள்ளது.

அதாவது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் நடிகர் சிம்பு நடிக்கும் படத்தை தான் அஸ்வத் மாரிமுத்து இயக்க கமிட் ஆகியிருந்தார். அரசன் படத்துக்கு பிறகு சிம்பு நடிக்கும் இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து டைரக்ட் செய்ய இருக்கிறார். இந்த சூழலில் தான் ரஜினி நடிக்கும் தலைவர் 173 படத்தை இயக்க அஸ்வத்துக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது.

- Advertisement -

அரசன் படப்பிடிப்பு முடிவடைய இன்னும் பல மாதங்கள் ஆகும் என்பதால் சிம்பு அஸ்வத் மாரிமுத்துவுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டார். ஆனால் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் இதற்கான ஒப்புதல் அளித்து அஸ்வத் மாரிமுத்துவுக்கு என்ஓசி தர வேண்டும்.

அப்போதுதான் அவர் ரஜினி படத்தை இயக்க முடியும். ஆனால் அவர்கள் வரும் மே மாதத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் ஷூட்டிங் துவங்க வேண்டும். ரஜினி நடிக்கும் படம் சிம்பு படம் இரண்டையும் மாறி மாறி இயக்குங்கள் என்று கூறியிருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் இரண்டில் ஒரு படத்தை மட்டுமே அஸ்வத் கமிட் செய்ய வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்