- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் பிரகாஷ்ராஜ் ரூ.100 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் - திருப்பதி தேவஸ்தானம் கோர்ட்டில்...

நடிகர் பிரகாஷ்ராஜ் ரூ.100 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் – திருப்பதி தேவஸ்தானம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். சமீபகாலமாக குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். கர்நாடகாவை சேர்ந்த அவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் இப்போது அரசியல் களத்தில் காணப்படுகிறார். சமீபத்தில் நடிகர் விஜய் குறித்து அவர் விமர்சித்து பேசியதற்கு பல தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இதற்கிடையே கேரளாவில் நடந்த இலக்கிய விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ் இராமாயணக் காவியம் குறித்து தெரிவித்த சில கருத்துகள் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. ராமரும் லட்சுமணனும் வடஇந்தியாவில் இருந்து வந்து தென்னிந்தியாவில் குறிப்பாக இலங்கையில் போர் தொடுத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement -

நடிகர் பிரகாஷ்ராஜின் இந்த பேச்சு இதிகாசங்களைத் திரித்துக் கூறுவதுடன் இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி சார்பில் அவரது வழக்கறிஞர் மூலம் பிரகாஷ் ராஜூக்கு அதிரடியாக சட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அந்த நோட்டீஸில் கூறியிருப்பதாவது, நடிகர் பிரகாஷ் ராஜின் பேச்சு மக்களிடையே தேவையற்ற பிரிவினையைத் தூண்டுவதாகவும், ஆரிய – திராவிட’ மோதல்களுக்கு வழிவகுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுவெளியில் பிரபலமானவர்கள் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த கருத்துகளைப் பகிரும்போது மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டது.

- Advertisement -

பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் அனுப்பப்பட்டு உள்ள இந்த நோட்டீஸில், பிரகாஷ் ராஜ் தனது பேச்சுக்காக அடுத்த 7 நாட்களுக்குள் செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. அதை அவர் செய்யத் தவறும் பட்சத்தில் ரூ. 100 கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும்.

மேலும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டது. பிரகாஷ் ராஜ் தரப்பில் இதற்கு பதில் தராத நிலையில் தற்போது ராமர் லட்சுமணர் குறித்து அவதூறாக பேசிய நடிகர் பிரகாஷ்ராஜிடம் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள பிரகாஷ்ராஜ் வீட்டுக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்