- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிக்கு உண்மையான போட்டியாக இருந்தவர் கமல் அல்ல, இவர்தான், ரஜினி படம் ஓடியது 150 நாள்தான்,...

ரஜினிக்கு உண்மையான போட்டியாக இருந்தவர் கமல் அல்ல, இவர்தான், ரஜினி படம் ஓடியது 150 நாள்தான், அவர் நடித்த படம் 500 நாள் – இது தரமான சம்பவமா இருக்கே?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த், இப்போதும் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டராக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார். 72 வயதிலும் தமிழில் ஹீரோவாக நடிக்கும் ஒரே ஸ்டார் நடிகர் இவர் மட்டுமே. அதுவும் ஜெயிலர் போன்ற படங்களில் அசகாய சூர வெற்றியை பார்த்து, தமிழ் சினிமாவே அரண்டு விட்டது.

ஆனால் ரஜினி சினிமாவுக்கு அறிமுகமானது 1977ல் தான். ஆனால், சில ஆண்டுகளிலேயே நல்ல நல்ல கேரக்டர்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விட்டார். 1980களுக்கு பிறகு, ரஜினி படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தனர். இதில் பல படங்கள் 100 நாட்கள், 150 நாட்கள் கடந்து ஓடிய பெரிய வரவேற்பை ரஜினிக்கு தமிழ் சினிமாவில் பெற்றுத் தந்தது.

அந்த காலகட்டத்தில், கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் அதிக ஆர்வம் காட்டவில்லை. இந்தி, மலையாள படங்களில் கமல் நடித்துக்கொண்டு இருந்தார். ஆனால் ரஜினிக்கு போட்டியாக, அதைவிட ரஜினி படங்களுக்கு பயங்கர போட்டியாக நடிகர் மைக் மோகனின் படங்கள் நிறைய வந்தன. இதில் ரஜினி படங்களை விட மோகன் படங்களே அதிக நாட்கள் ஓடியது.

1980களில் வந்த ரஜினி படங்களில் முரட்டுக்காளை, தங்கமகன், நான் சிகப்பு மனிதன், பொல்லாதவன், தனிக்காட்டு ராஜா, எங்கேயோ கேட்ட குரல், மூன்று முகம், நான் மகான் அல்ல, தம்பிக்கு எந்த ஊரு, நல்லவனுக்கு நல்லவன், அன்புள்ள ரஜினிகாந்த், ஸ்ரீ ராகவேந்திரர், மிஸ்டர் பாரத், நான் அடிமை இல்லை, வேலைக்காரன், ஊர்க்காவலன் உள்ளிட்ட படங்கள் வந்தன. இதில் சில படங்கள் 100, 150 நாட்கள் ஓடியது. சில படங்கள் சுமாராக மட்டுமே இருந்தது.

ஆனால் மோகன் நடித்த நிரபராதி, உதயகீதம், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, 100வது நாள், மூடுபனி, இதயகோவில், விதி, டிசம்பர் பூக்கள், உயிரே உனக்காக, மெல்லத் திறந்தது கதவு, ரெட்டைவால் குருவி, நான் பாடும் பாடல் என பல படங்கள் மோகனுக்கு வெற்றி படங்களாக இருந்தன. 200 நாட்கள் முதல் 365 நாட்கள் வரை உதய கீதம், பயணங்கள் முடிவதில்லை, இதயகோவில், மெல்ல திறந்தது கதவு, உயிரே உனக்காக போன்ற படங்கள் ஓடியிருக்கின்றன. விதி படம் 500 நாட்கள் ஓடியிருக்கிறது.

இப்படி வளர்ந்துவரும் நிலையில் இருந்த ரஜினி, பல ஹிட் படங்களை கொடுத்தாலும் அவரை விட பல வெற்றி படங்களை தந்திருக்கிறார் மோகன். அதுவும் ரஜினி படங்கள் 100, 150 நாட்களே ஓடிய நிலையில், மோகனின் பல படங்கள் 200, 250, 365 என தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியிருக்கிறது. இதில் மற்றொரு முக்கிய விஷயம், அடுத்தடுத்த வந்த மோகனின் படங்களுக்கும் முந்தைய படத்தில் அதே வரவேற்பை ரசிகர்கள் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிக்கே டப் கண்டெஸ்ட் ஆக மோகன், நாளடைவில் தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனதுதான் மிகப்பெரிய சோகம். ஆனால், இப்போது விஜய் 68 படத்தின் மூலம் மோகன் மீண்டும் ரசிகர்களை காண வருகிறார்.

சற்று முன்