- Advertisement -
Homeபொழுதுபோக்குகணவன் மனைவி உறவை சொல்லும் கதைக்களம் - நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யாமேனன் நடித்த...

கணவன் மனைவி உறவை சொல்லும் கதைக்களம் – நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யாமேனன் நடித்த தலைவன் தலைவி படத்தின் டிரெய்லர் வெளியீடு!

- Advertisement -

நடிகர் விமல் ஹீரோவாக அறிமுகமான பசங்க படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜன். தொடர்ந்து மெரினா வம்சம் கடைக்குட்டி சிங்கம் இது நம்ம ஆளு எதற்கும் துணிந்தவன் நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களை பாண்டிராஜன் இயக்கியிருக்கிறார். இதில் அவரது பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாகும்.

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விமல் பசங்க படம் மூலம் அறிமுகமானார். அதேபோல் மெரினா படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை பாண்டிராஜ் அறிமுகப்படுத்தினார். அதே போல் வம்சம் படம் மூலம் நடிகர் அருள்நிதி அறிமுகமானார். அதனால் தமிழ் சினிமாவில் 3 முக்கிய ஹீரோக்களை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இயக்குனர் பாண்டிராஜன்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. கடந்தாண்டில் வெளியான அவரது 50வது படம் மகாராஜா மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய இந்த படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது. தோல்வி படங்களாக கொடுத்து வந்த விஜய் சேதுபதிக்கு இது கம்பேக் படமாக அமைந்தது.

தொடர்ந்து இந்த ஆண்டில் வெளியான விஜய் சேதுபதியின் ஏஸ் படம் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. பிளாப் படமாக அமைந்தது. இதையடுத்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 52வது படம் தலைவன் தலைவி. இந்த படம் வருகிற 25ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

- Advertisement -

தலைவன் தலைவி படத்தில் ஆகாசவீரன் என்ற பெயரில் பரோட்டா மாஸ்டர் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், இந்த படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் நடிகர் யோகி பாபு ஆர்கே சுரேஷ் காளிவெங்கட் பிஎல் தேனப்பன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் தலைவன் தலைவி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கணவன் மனைவி இடையே ஏற்படும் காதல் பிரிவு சண்டை விவாகரத்து நட்பு புரிதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை இந்த படம் பேசியுள்ளது. முழுக்க முழுக்க குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள இந்த படம் நிச்சயமாக பாண்டிராஜூக்கு கடைக்குட்டி சிங்கம் நம்ம வீட்டு பிள்ளை போல ஒரு வெற்றி படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்