தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பிறகு ஹீரோவாக மாறியவர் சத்யராஜ். இப்போது 70 வயதான நிலையில் ஏதாவது வாய்ப்பு கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் எம்ஜிஆர் ரசிகராக தன்னைக் காட்டிக் கொண்ட சத்யராஜ் பிறகு திமுகவின் ஆதரவாளராக மாறினார். கடவுள் மறுப்பாளராக பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுபவராகவும் இருக்கிறார்.
சமீபத்தில் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணைந்தார். அவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டாலும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரவில்லை. ஆனால் விருப்ப மனு தாக்கல் செய்திருந்த போதும் ஸ்டாலின் அவரை கண்டுகொள்ளவில்லை. அதனால் திவ்யாவை திமுக தேர்தல் பிரசாரங்களிலும் காண முடியவில்லை.
இந்நிலையில் சில தினங்களாக நடிகர் சத்யராஜ் திமுக தேர்தல் களத்தில் காணப்படுகிறார். குறிப்பாக நடிகர் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். விஜய் நல்ல நடிகர். அதனால் அவர் சினிமாவில் இருந்தால் தான் நமக்கு பொழுதுபோக்காக இருக்கும். அவரை சினிமாவுக்கே அனுப்பி விடுங்கள் என்று நக்கலாக பேசி வருகிறார்.
மேலும் சின்ன சம்பளம் வாங்கிற சாதாரண நடிகன் என்னை நீங்கள் பார்க்கறதே சிரமம். பெரிய சம்பளம் வாங்கிற உச்ச நடிகரான விஜயை நீங்கள் நேரில் சந்திக்கவோ பார்க்கவோ முடியாது. அதனால் அவருக்கு ஆதரவு கொடுக்காதீர்கள் என்றும் திமுகவுக்கு ஆதரவாக சத்யராஜ் பேசி வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ், அவரும் சில படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் ஒரு சில படங்கள் தவிர அவருக்கு பெரிய அளவில் படங்கள் வெற்றி பெறவில்லை. ஆனால் அவர் ஆரம்பத்தில் இருந்தே விஜய் ரசிகராக இருந்து வருகிறார். விஜய் தவெக கட்சி ஆரம்பித்தது முதல் விஜய்க்கு சப்போர்ட் செய்து வருகிறார்.
இப்படிப்பட்ட சூழலில், சத்யராஜின் விஜயை விமர்சித்து வரும் நிலையில் அவரது மகன் சிபிராஜ் தனது வலைதள பக்கத்தில் ஒரு பதிவை செய்திருக்கிறார். அதில் உசுப்பேத்தறவன்கிட்ட உம்முன்னும் கடுப்பேத்தறவன்கிட்ட கம்முன்னு இருந்தால் நம்ம வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும் என்று விஜய் பேசிய டயலாக்கை பதிவிட்டுள்ளார். தன் மகளுக்காக மேடையில் விஜயை விமர்சித்து மகனிடம் அசிங்கப்பட்டார் புரட்சித் தமிழன் என தவெகவினர் கலாய்த்து வருகின்றனர்.





