சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று பிற்பகல் நடந்த தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பேசியதாவது, திமுக ஆட்சியை திமுக தலைவர் ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்பப் போற கடைசி தேர்தல் பிரசாரம் இது. மக்களை கண்டுக்காத ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்பாமல் கோட்டைக்கா அனுப்ப முடியும்?
வீட்டுவரி தண்ணீர் வரி தொழில்வரி விலைவாசி உயர்வு குப்பைக்கு வரி என்று மக்களுக்கு பல கஷ்டங்களை கொடுத்தது திமுக அரசு. 5 ஆயிரம் லட்சம் கோடி கடனும் வாங்கி இன்னும் மக்கள் மீது சுமையை உயர்த்தியுள்ளது. ஆனால் மாணவர்களின் கல்வி கடனை கூட ஸ்டாலின் ரத்து செய்யவில்லை.
கருத்து கணிப்பு எல்லாமே கடுப்புல வந்து கணிப்புகள்தான். எதுவும் உண்மையில்லே. சும்மா அடித்து விடுகிறார்கள். அவர்கள் தில்லுமுல்லுவுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. 40 வயதுக்குள் இருப்பவர்கள்தான் விஜய்க்கு ஓட்டு போடுவார்கள். 50 வயதுக்குள் இருப்பவர்கள் சிலர்தான் போனால் போகிறது என்று விஜய்க்கு ஓட்டு போடுவார்கள். 60 70 80 வயதானவர்கள் எனக்கு ஓட்டே போட மாட்டார்கள் என்கின்றனர்.
இப்போது எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி 40 வயதுக்குள் இருப்பவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 37 லட்சம் பேர். 50 வயதுக்குள் இருப்பவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 65 லட்சம் பேர். இதில் உள்ள பெண்கள் எண்ணிக்கை மட்டுமே 1 கோடியே 77 லட்சம் பேர்.
இவர்கள் எல்லாம் அவங்க குடும்பத்துல ஒருத்தனா நம்ம வீட்டு பிள்ளை விஜய்ன்னு சொல்றாங்க. அது காதுல கேட்கலையோ? அதனால் இந்த கருத்து கணிப்பு எல்லாமே டர் தான். அதனால் வருகிற தேர்தலில் திமுக உள்ளிட்ட மற்றும் பல கட்சிகள் மண்ணை கவ்வப் போறது உறுதி. திமுகவின் ஆட்சிக் கனவு ஊழல் கனவு லஞ்சக் கனவு எல்லாமே முடிவுக்கு வந்து விட்டது. எல்லாமே ஹதம் ஹதம் தான்.
நீங்க வேணா பாருங்க. தேர்தலில் தோற்ற பிறகு கட்சியை காப்பாற்றவும் ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும் ஸ்டாலின், டெல்லிக்கு சென்று மோடி காலிலும் அமித்ஷா காலிலும் விழப்போவது நடக்க தான் போகிறது. அதனால் இனி திமுக ஆட்சிக்கு வாய்ப்பில்லை. தேர்தல் ரிசல்ட் நாளான மே 4ம் தேதி அக்னி நட்சத்திர வெயில் ஸ்டார்ட் ஆகுது. அந்த சுட்டெரிக்கும் சூரியன் வேண்டாம் என்று மக்கள் நினைப்பார்கள். அந்த நாளின் துவக்கம் தான் திமுகவின் முடிவாக அமையப் போகிறது என்று அந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசினார்.





