- Advertisement -
Homeபொழுதுபோக்கு604 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்தாரா இயக்குனர் சுந்தர் சி? 180 கோடி ரூபாய் வரி...

604 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்தாரா இயக்குனர் சுந்தர் சி? 180 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்ததா? – மதுரை மத்திய தொகுதியில் ஏற்பட்ட பரபரப்பு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. பல படங்களில் நாயகனாகவும் அவர் நடித்திருக்கிறார். இப்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை டைரக்ட் செய்த நிலையில் புருஷன் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். நடிகை குஷ்புவின் கணவர் சுந்தர் சி, இப்போது மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளராக உள்ளார்.

இந்நிலையில் வக்கீல் வாஞ்சிநாதன் என்பவர் வேட்பாளர் சுந்தர் சி தனது வேட்பு மனுதாக்கலின் போது 604 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி தாக்கல் செய்த பார்ம் 26ஐ பரிசீலனை செய்த போது கிட்டத்தட்ட 604 கோடி ரூபாய் மதிப்பிலான வருமானங்களை சுந்தர் சி குஷ்புவுடன் சேர்ந்து மறைத்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

- Advertisement -

மதுரை சிவில் சமூகத்தின் பிரதிநிதி என்கிற முறையில் நேற்று உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பல்வேறு விவரங்கள் நீதிமன்ற விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டன. அவற்றை எல்லாம் நாங்கள் ஆய்வு செய்து பார்த்தபோது மதுரை வாக்காளர்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும்.

சுந்தர் சி யும் குஷ்பூவும் இணைந்து அவ்னி சினிமா பிரைவேட் லிமிடெட் அவ்னி மூவிஸ் அவ்னி டெலி மீடியா என்கிற மூன்று நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள். இந்த மூன்று நிறுவனங்களையும் அவர்கள் பதிவு செய்து நடத்தி வருகிறார்கள். இதில் பார்ட் ஆஃப் டைரக்டர் என்று குஷ்பு சுந்தர் சி யின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இந்த மூன்று நிறுவனங்களின் இயக்குனர்களாகவும் பங்குதாரர்களாகவும் இவர்கள் இருக்கின்றனர்.

- Advertisement -

மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டுள்ள வேட்பாளர் சுந்தர் சி தாக்கல் செய்த வேட்பு மனுவில், எங்களிடம் எந்த கம்பெனியும் இல்லை என்று குறிப்பிட்டு உண்மையை மறைத்திருக்கிறார். அவர்தான் அப்படி செய்தார் என்றால் அவரது மனைவி குஷ்பூவும் இதே போல் உண்மையை மறைத்திருக்கிறார். பாஜக சார்பில் 2021ம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட போது அவரும் அந்த வேட்பு மனுவில், எங்களிடம் கம்பெனி இல்லை என்று குறிப்பிட்டு உண்மையை மறுத்திருக்கிறார்.

இந்த மூன்று நிறுவனங்களின் பெயர்களிலும் 22 படங்கள் பல டிவி சீரியல்களை சுந்தர் சி குஷ்பு சொந்தமாக தயாரித்து எடுத்திருக்கிறார்கள். அதன் மூலமாக 604 கோடி ரூபாய் வருமானம் வந்திருக்கிறது. இந்த வருமானத்திற்கு சுமார் 180 கோடி ரூபாய் இவர்கள் வரி கட்டி இருக்க வேண்டும். ஆனால் அதை ஏமாற்றி மறைத்திருக்கிறார்கள் என்று வக்கீல் வாஞ்சிநாதன் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்