- Advertisement -
Homeபொழுதுபோக்குபெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கேப்டனின் மகன் சண்முகபாண்டியன் நடித்த கொம்பு சீவி படம் -...

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கேப்டனின் மகன் சண்முகபாண்டியன் நடித்த கொம்பு சீவி படம் – 6 நாட்களில் வசூல் நிலவரம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்தவர் விஜயகாந்த். கேப்டன் என்ற அழைக்கப்பட்ட அவர் தேமுதிக என்ற அரசியல் இயக்கத்தை கடந்த 2005ம் ஆண்டில் மதுரையில் துவங்கினார். சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் அவருக்கு பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது.

விஜயகாந்த் நடித்த பெரும்பாலான படங்கள் வெள்ளிவிழா படங்களாக வெற்றியை கண்டன. இப்போது அவரது மகன் சண்முக பாண்டியனும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். மதுரை வீரன் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமான அவர் சகாப்தம் படை தலைவன் ஆகிய படங்களில் நடித்தார்.

- Advertisement -

ஆனால் இந்த 3 படங்களுமே அவருக்கு பெரிய அளவில் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுத் தரவில்லை. விஜயகாந்த் மகன் என்ற அடையாளம் மட்டுமே அவருக்கு இதுவரை உள்ள நிலையில் சினிமாவில் ஒரு நட்சத்திர நடிகராக உருவாக அவர் தொடர்ந்து போராடி வருகிறார்.

இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன் போன்ற வெற்றிப் படங்களை தந்த இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடித்த கொம்பு சீவி என்ற படம் கடந்த 19ம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நடிகர் சரத்குமார் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் நாட்டாமை படத்தில் டீச்சர் கேரக்டரில் நடித்த நடிகை ராணியின் மகள் தார்னிகா இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் சண்முக பாண்டியனுக்கு ஒரு அடையாளத்தை தரும் முக்கியமான வெற்றிப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடந்த 19ம் தேதி வெளியான கொம்பு சீவி படம் 6 நாட்களில் உலகளவில் மொத்தம் ரூ. 2.1 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இது மிகவும் குறைவான வசூலாக இருப்பதால் இந்த படம் விமர்சன ரீதியாக சற்று கவனம் பெற்ற போதிலும் வணிக ரீதியான வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கேப்டன் ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்