- Advertisement -
Homeபொழுதுபோக்குதொடர்ந்து நோ சொன்ன 3 இயக்குனர்கள், விஜய் சேதுபதிக்கே இப்படி ஒரு ஏமாற்றமா? நொந்து போன...

தொடர்ந்து நோ சொன்ன 3 இயக்குனர்கள், விஜய் சேதுபதிக்கே இப்படி ஒரு ஏமாற்றமா? நொந்து போன மக்கள் செல்வன் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் தலைவன் தலைவி. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. கடந்தாண்டில் வெளியான தமிழ் படங்களில் 100 கோடி ரூபாய் வசூலித்த படங்களில் இதுவும் ஒன்று. இதில் நித்யா மேனன் நாயகியாக நடித்திருந்தார்.

இந்த படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி நடித்த வெப் சீரிஸ் முத்து என்கிற காட்டான் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதற்கிடையே பிக்பாஸ் சீசன் 9ல் விஜய் சேதுபதி தொகுப்பாளராக கலந்துக்கொண்டார். இயக்குனர் தியாகராஜா குமாராஜா இயக்கத்தில் பாக்கெட் நாவல் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

- Advertisement -

இதையடுத்து லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியிருந்தார். நாயகியாக சாய்பல்லவி நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 15ம் தேதி துவங்குவதாக இருந்தது. ஆனால் இப்போது இந்த படம் ஜூன் அல்லது ஜூலை மாதம் தான் படப்பிடிப்பு துவங்கும் என்று விஜய் சேதுபதிக்கு சொல்லப்பட்டுள்ளது.

மணிரத்னம் ஸ்கிரிப்ட் எழுதி முடிக்கவில்லை என்றும் லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு நிதி பிரச்னை என்றும் 2 காரணங்கள் இதில் சொல்லப்படுகிறது. இந்த சூழலில் மகாராஜா பட இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் மகாராஜா 2 படத்தை துவக்கலாம் என்று விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.

- Advertisement -

ஆனால் அவர் இன்னும் நான் ஸ்கிரிப்ட் எழுதி முடிக்கவில்லை என்று மறுத்துள்ளார். மகாராஜா படம் வெளியாகி 3 ஆண்டுகளான நிலையில் இன்னும் 2ம் பாகம் ஸ்கிரிப்ட் எழுதி முடிக்காமல் நித்திலன் சாமிநாதன் அலட்சியம் காட்டுவது விஜய் சேதுபதிக்கு விரக்தியை தந்துள்ளது. தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் மனைவியான இயக்குனர் கிருத்திகா உதயநிதியிடம் விஜய் சேதுபதி தரப்பு பேசியிருக்கிறது.

ஏனெனில் கிருத்திகா உதயநிதி இயக்கத்திலும் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் தேர்தல் பரபரப்பில் வருகிற 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் அவர்கள் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் தான் படப்பிடிப்பு என கூறிவிட்டனர். இப்படி தொடர்ந்து 3 இயக்குனர்களும் நோ சொன்னதால் விஜய் சேதுபதி அப்செட்டில் உள்ளார். மக்கள் செல்வனின் ரசிகர்களும் நொந்து போய் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்