- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் நடித்த பல படங்களில் அந்த தவறை செய்தேன், அந்த குற்ற உணர்ச்சி எனக்கு இருந்தது...

நான் நடித்த பல படங்களில் அந்த தவறை செய்தேன், அந்த குற்ற உணர்ச்சி எனக்கு இருந்தது – பல ஆண்டுகளுக்கு பின் உண்மையை சொன்ன நடிகர் அஜீத்குமார்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. ரூ. 250 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்திருக்கிறது. இந்த படம் அஜீத் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்திருந்தது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்து இருந்தார். திரிஷா படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அடுத்து நடிகர் அஜீத்குமார் நடிக்கும் படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்க உள்ளார், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

நடிகர் அஜீத்குமாருக்கு கடந்த வாரத்தில் மத்திய அரசின் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவருக்கு இந்த விருதை ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

நடிகர் அஜீத்குமார் இப்போது வெளிநாடுகளில் நடந்துவரும் கார் ரேஸில் கடந்த 4 மாதங்களாக பங்கேற்று வருகிறார். வருகிற அக்டோபரில்தான் இந்த கார் ரேஸ் முடிவடைகிறது. அதற்கு பின்தான் தனது அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கிடையே பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜீத்குமாருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் அஜீத்குமார் கூறியதாவது, நேர்கொண்ட பார்வை படத்திற்கு முன் நான் நடித்த சில படங்கள் என்னை குற்ற உணர்ச்சி அடைய செய்தன. என்னுடைய சில படங்களில் பெண்களை ஸ்டாக்கிங் செய்வது போன்ற விஷயங்களை ஊக்குவிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றன. அந்த படங்களில் நான் நடித்திருக்கிறேன் என்ற குற்ற உணர்ச்சி எனக்கு இருந்தது.

நாங்கள் திரையில் செய்யும் விஷயங்களை தான் மக்கள் பின்பற்ற நினைப்பார்கள். நான் முந்தைய படங்களில் செய்த அந்த தவறுகளை சரி செய்வதற்காக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தேன். பிங்க் என்ற திரைப்படத்தை ரீமேக் செய்து நேர்கொண்ட பார்வை படம் எடுக்கப்பட்டது. முந்தைய படங்கள் தந்த குற்ற உணர்ச்சியால் தான் நேர்கொண்ட பார்வை படத்தில் நான் நடித்தேன் என்று நடிகர் அஜீத்குமார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்