- Advertisement -
Homeபொழுதுபோக்குவாழை 2 படத்தை இயக்க தயாரான இயக்குனர் மாரி செல்வராஜ் - மீண்டும் அந்த ஹீரோவுடன்...

வாழை 2 படத்தை இயக்க தயாரான இயக்குனர் மாரி செல்வராஜ் – மீண்டும் அந்த ஹீரோவுடன் கை கோர்க்கிறாரா?

- Advertisement -

பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த படத்தில் ஹீரோவாக கதிர் நடித்தார். ஹீரோயினாக கயல் ஆனந்தி மற்றும் யோகிபாபு மாரிமுத்து உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை வெற்றியை பெற்றது.

தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்த கர்ணன், முதன்முறையாக குணச்சித்திர வேடத்தில் நடிகர் வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடித்த மாமன்னன் ஆகிய படங்களும் மாரி செல்வராஜூக்கு நல்ல வரவேற்பை வெற்றியை தேடித் தந்தது. அதன்பிறகு வாழை படத்தை இயக்கிய மாரி செல்வராஜூக்கு அந்த படமும் நல்ல பெயரை பெற்றுத் தந்தது.

- Advertisement -

அதைத் தொடர்ந்து நடிகர் துருவ் விக்ரம் பசுபதி அனுபமா பரமேஸ்வரன் அழகம் பெருமாள் அமீர் லால் உள்ளிட்டோர் நடித்த பைசன் காளமாடன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கினார். இந்த படமும் வெற்றிப் படமாக அமைந்தது. இதுவரை மாரி செல்வராஜ் படங்கள் எல்லாமே வசூல் வெற்றி பெற்றிருக்கின்றன.

ஆனால் விமர்சன ரீதியாக இவரது படங்கள் கடும் எதிர்ப்புகளை சந்தித்திருக்கின்றன. குறிப்பாக மாரி செல்வராஜ் படங்கள் சாதி பிரிவினை மனித உரிமைகளில் பாரபட்சம் சமூக ஏற்றத்தாழ்வுகள் சாதிய அரசியல் குறித்து பேசுவது பலருக்கும் அதிருப்தியை தருவதால் ஒரு இயக்குனராக அவர் சமூக பிரச்னைகளை தூண்டிவிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

- Advertisement -

அடுத்ததாக நடிகர் தனுஷ் நடிக்கும் ஒரு பிரமாண்ட வரலாற்று படத்தை இயக்க மாரி செல்வராஜ் கமிட் ஆகியிருக்கிறார். ஆனால் அதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகும் என்பதால் அதற்கு முன்பாக வாழை 2 படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். வாழை படத்தை ஜியோ ஹாட் ஸ்டாருடன் இணைந்து தயாரித்த மாரி செல்வராஜ், இந்த வாழை 2 படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் இணைத்து உருவாக்க உள்ளார்.

வாழை 2 படத்தில் நாயகனாக கதிர் நடிக்கிறார். இவர்தான் மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படம் பரியேறும் பெருமாள் படத்தில் ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் கயாடு லோஹர் பிரியங்கா மோகன் நடிக்கின்றனர். மேலும் வாழை படத்தில் டீச்சராக நடித்த நிகிதா விமலும் இதில் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்