- Advertisement -
Homeபொழுதுபோக்குநெல்சன் இயக்கத்தில் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தில் கதாநாயகி அவர்தான் - சம்பளம் மட்டும்...

நெல்சன் இயக்கத்தில் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தில் கதாநாயகி அவர்தான் – சம்பளம் மட்டும் இத்தனை கோடிகளா?

- Advertisement -

நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆரம்பத்தில் நிறைய படங்களில் இணைந்து நடித்தனர். அந்த படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. 16 வயதினிலேயே மூன்று முடிச்சு நினைத்தாலே இனிக்கும் அலாவுதீனும் அற்புத விளக்கும் என பல படங்களில் ரஜினி கமல் இணைந்து நடித்த நிலையில் 47 ஆண்டுகளாக அவர்கள் இணைந்து நடிக்கவில்லை.

இப்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை ஜெயிலர் ஜெயிலர் 2 படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் டைரக்ட் செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரிய அளவில் இணையத்தில் வைரலானது.

- Advertisement -

இந்த படத்தில் ஹீரோ கமல் என்றும் வில்லன் ரஜினி என்றும் கூறப்படுகிறது. படத்தின் அறிமுக வீடியோவிலேயே படத்தின் இயக்குனர் நெல்சனிடம், யார் ஹீரோ என்று கமல் கேட்பது போலவும், கேட்குறாங்கல்ல சொல்லுங்க ஜி என ரஜினி சொல்வது போலவும் காட்சியமைப்பு பெரிய வரவேற்பை பெற்றது.

ரெட் ஜெயிண்ட் மூவிஸ் சார்பில் இன்பன் உதயநிதி தயாரிக்கும் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை திரிஷா கமிட் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கமலுடன் மன்மதன் அம்பு தக்லைஃப் மற்றும் தூங்காவனம் படங்களில் திரிஷா நடித்திருக்கிறார்.

- Advertisement -

அதே போல் ரஜினிக்கு ஜோடியாக பேட்ட படத்தில் திரிஷா நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் கமல் ஹீரோ என்பதால் அவருக்கு தான் திரிஷா ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளது. ஆனால் ரஜினி கமல் இருவருமே 70 வயது கடந்த ஹீரோக்கள் என்பதால் திரிஷா படத்தின் நாயகியா? கமலுக்கு ஜோடியா என்பது உறுதியாகவில்லை.

மேலும் இந்த படத்தில் நடிக்க நடிகை திரிஷாவுக்கு ரூ. 12 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் 23 ஆண்டுகளுக்கு மேலாகவும் நாயகியாக வலம் வரும் திரிஷா தான் நயன்தாராவுக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருக்கிறார். சூர்யாவுடன் திரிஷா நடித்த கருப்பு படம் வருகிற 14ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் ரஜினி கமல் இணையும் படத்திலும் திரிஷா நடிப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்