- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயை பத்தி அப்பவே எனக்கு தெரியும், தளபதியின் பர்சனல் லைஃப் குறித்து பல விஷயங்களை வெளிப்படையாக...

விஜயை பத்தி அப்பவே எனக்கு தெரியும், தளபதியின் பர்சனல் லைஃப் குறித்து பல விஷயங்களை வெளிப்படையாக சொன்ன விஜயின் சித்தி ஷீலா!

- Advertisement -

பல தடைகளை கடந்து தமிழக முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றிருக்கிறார் சட்டசபை தேர்தலுக்கு முன்பு விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை கடுமையான விமர்சனங்களை சர்ச்சைகளை சந்தித்தது. இந்நிலையில் விஜயின் சித்தி ஷீலா ஒரு நேர்காணலில் சில விஷயங்களை வெளிப்படையாக பேசியிருப்பது சமூக வலைதளங்களில் இப்போது சென்சேஷனலாக மாறி வைரலாகி வருகிறது.

தேர்தலுக்கு முன்பு விஜயின் மனைவி சங்கீதா, விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அப்போது இன்னொரு நடிகையுடன் விஜய் திருமணத்தை மீறிய உறவின் இருப்பதாகவும் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர் அப்படி சொன்னது போலவே விஜய் திரிஷா ஒன்றாக திருமணத்திற்கு சென்றதும் இது விஜய்க்கான பர்சனல் இமேஜை அரசியல் களத்தில் உடைத்து விடும் என்றே பலரும் நினைத்தார்கள்.

ஆனால் இந்த தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பெண்களின் பெருவாரியான வாக்குகள்தான் விஜய்க்கு அபரிமிதமாக உதவியது. இந்நிலையில் விஜயின் அம்மா ஷோபாவின் தங்கை, அதாவது முதல்வர் விஜயின் சித்தி ஷீலா ஒரு நேர்காணலில் விஜய் குறித்து கூறியிருப்பதாவது, விஜய் சிறுவயதில் இருந்தே மிகவும் அமைதியான கேரக்டர்தான். ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார்.

அவர் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு அந்த மேடையில் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் நான் சந்தோஷத்தோடு கைகளை தட்டிக் கொண்டிருந்தேன். அவரைப் பார்த்து ஹாய் என்று கையை அசைத்தேன். ஐயோ இப்போது அவர் முதல்வர் ஆச்சே என்று தோன்றியது.உடனே இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் வைத்தேன். பதிலுக்கு அவரும் வணக்கம் வைத்தார்.

அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகள் தான் வந்திருக்கின்றன. ஏன் இப்படி செய்கிறார்கள்? அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் மீது பழி போடலாமா? என்று கூட எனக்கு தோன்றும். அரசியல் என்றால் இப்படித்தான் இருக்கும் போல என்றும் நினைத்துக் கொள்வேன்.

எனக்கு ரொம்பவும் வருத்தமாக இருக்கும். அதே சமயம் அவர்கள் ஏதோ எழுதுகிறார்கள். இதை ஏன் நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கடந்து விடுவேன். அப்பப்போ டைம் பாஸ்க்கு மட்டும் படிப்பேன். நானாவது பரவாயில்லை. விஜயின் அம்மா ஷோபா, அந்த செய்திகளையெல்லாம் திரும்பி கூட பார்க்க மாட்டார் என்று ஷீலா அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்