- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் எடுக்கும் முடிவுகளில் நீங்க தலையிடாதீங்க, அதுபற்றி முதல்வருக்கு எல்லாம் தெரியும் - நடிகர் விஷாலுக்கு...

விஜய் எடுக்கும் முடிவுகளில் நீங்க தலையிடாதீங்க, அதுபற்றி முதல்வருக்கு எல்லாம் தெரியும் – நடிகர் விஷாலுக்கு நடிகர் அருண் விஜய் கண்டனம்!

- Advertisement -

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் அபார வெற்றி பெற்று திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கடந்த 10ம் தேதி தவெக கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றார்.

அப்போது, என் அண்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என நடிகர் அருண் விஜய் வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார். முதல்வராக விஜய் பதவியேற்ற போதே 9 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கான அமைச்சரவை இலாகாக்கள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டது.

- Advertisement -

இதில் முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட 10 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் அமைச்சர் ராஜ்மோகனுக்கு பள்ளி கல்வித்துறை செய்தி மற்றும் விளம்பரத்துறை சினிமாத்துறை ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் நடிகர் விஷால் தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.

ராஜ்மோகனுக்கு திரைத்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் திரைத்துறை சார்ந்த கோரிக்கைகளை அனுபவம் இல்லாத ராஜ் மோகனுக்கு வைப்பது சரியாக இருக்குமா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இதுகுறித்து நடிகர் அருண் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, முதலமைச்சரின் முடிவுகளில் யாரும் தலையிட வேண்டாம். மக்கள் அவரை நம்பித்தான் முதலமைச்சராக தேர்ந்தெடுத்தார்கள். நீங்கள் வேண்டுமானாலும் மக்களின் நம்பிக்கையை வென்று தேர்தலில் வெற்றி பெற்று அதன் பிறகு உங்கள் விருப்பத்தை பதிவிடுங்கள். மீண்டும் சொல்கிறேன். முதலமைச்சரின் முடிவுகளில் யாரும் தலையிட வேண்டாம்.

முதலமைச்சர் திரைத்துறையில் இருந்தவர் என்று நம் அனைவருக்கும் தெரியும். அவருக்கும் நம் நிலைமை புரியும். அவர் நமக்கு நல்லது மட்டும்தான் செய்வார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தயவு செய்து முதலமைச்சரின் முடிவுகளை மதித்து மாற்றத்திற்காக காத்திருங்கள். நாம் தவறான முடிவுகளையும் தவறான செய்திகளையும் வெளியிட வேண்டாம். பொறுத்து இருங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நடிகர் அருண் விஜய் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்