- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்ன சோணமுத்தா போச்சா... லியோ படத்தை வெளியிட தடை... நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

என்ன சோணமுத்தா போச்சா… லியோ படத்தை வெளியிட தடை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

- Advertisement -

தமிழ் திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரை உலகமும் தற்போது ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருப்பது லியோ திரைப்படத்தைப் பற்றி மட்டும்தான். படத்தின் சூட்டிங் ஆரம்பித்தது முதல் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது வெளியீட்டில் ஒட்டுமொத்த பிரச்சனையும் ஒன்றாக வந்து குவிந்துள்ளது.

நாளை மறுநாள் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், சென்னையின் பல முக்கிய திரையரங்குகளில் முன்பதிவு இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளது. படம் வெளியான ஒரு வாரத்திற்குள் 75 சதவீத வசூலை தயாரிப்பு நிறுவனம் கேட்பதாலேயே இந்த பிரச்சனை என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக ரோகினி, கமலா, ஏஜிஎஸ் உள்ளிட்ட திரையரங்குகளில் இன்னும் முன்பதிவு தொடங்கப்படவில்லை. இது ஒரு புறம் இருக்க, எங்களுக்கு அதிகாலைக் காட்சி வேண்டும் என்று அடம் பிடிக்கிறது லியோ தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்டுடியோஸ். ஏற்கவே கேரளா கர்நாடகா மாநிலங்களில் லியோ படத்திற்கான அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு கொண்டாட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள் ரசிகர்கள். குறிப்பாக அதிக விஜய் ரசிகர்கள் இருக்கும் கேரளாவில், கட்டவுட், பாலாபிஷேகம், சாலையில் பேரணி என இப்போதே கொண்டாட்டம் களைக்கட்ட தொடங்கியுள்ளது. அதேசமயம் தமிழ்நாட்டில் அதிகாலைக் காட்சிக்கு அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்தது.

- Advertisement -

வேண்டுமென்றால் காலை 7 மணி காட்சிக்கு தமிழக அரசிடம் முறையிடலாம் என நீதிமன்றம் குறிப்பிட்டது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் இருந்து, தமிழக அரசிடம் 7:00 மணி காட்சிக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க தெலுங்கிலும் லியோ படத்தை வெளியிட பல சிக்கல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

படத்தின் டைட்டில் தொடர்பான பிரச்சினையால் வழக்கை விசாரித்த ஹைதராபாத் நீதிமன்றம், லியோ படத்தை திரையிட 20ஆம் தேதி வரை தடை விதித்தது. இப்படி நாலா பக்கமும் லியோ படத்திற்கு பிரச்சனைகள் வந்திருப்பதால் தயாரிப்பு நிறுவனம் சோர்வு அடைந்துள்ளது. ஏற்கனவே 9 மணி காட்சிக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் தீர்ந்துள்ள நிலையில், இப்போது ஏழு மணி காட்சிக்கு தயாரிப்பு நிறுவனம் முறையிட்டால் ஒன்பது மணிக்கு புக் செய்தவர்கள் என்ன ஆவார்கள் என்று திரையரங்கு உரிமையாளர்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

- Advertisement -

சற்று முன்