- Advertisement -
Homeபொழுதுபோக்குகடவுள் நம்பிக்கை இல்லாம கருப்பு படம் பார்க்க போறீங்களா? மண்டை பத்திரம் - ரசிகர்களை எச்சரித்த...

கடவுள் நம்பிக்கை இல்லாம கருப்பு படம் பார்க்க போறீங்களா? மண்டை பத்திரம் – ரசிகர்களை எச்சரித்த பிரபலம்!

- Advertisement -

இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிகை திரிஷா நடித்த கருப்பு படம் குறித்து விமர்சித்து சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ப்ளூ சட்டை மாறன் கருப்பு படம் குறித்து கூறியிருப்பதாவது, இந்த படத்தில் இரண்டு சுவாரஸ்யமான விஷயங்களை கையாண்டு உள்ளார்கள்.

அதில் ஒன்று கோர்ட் ரூம் டிராமாவாக இருப்பது. மற்றொன்று சாமி படமாக இருப்பது. முதல் பாதியில் கூட படத்தின் கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது. அதுவும் இந்திரன்ஸ் வரும் காட்சிகளும் கோர்ட் ரூம் காட்சிகளும் நன்றாகவே இருந்தது. அதன் பின்னர் சாமி வருகிறது. சாமி வந்த பின்னர் கோர்ட் ரூம் டிராமாக்கள் போய் விடுகிறது. முதல் பாதியை பொறுத்தவரை ஓரளவுக்கு ஓகே.

அதுவும் முதல் பாதியில் ஆர்ஜே பாலாஜி கடவுளாக உள்ள சூர்யாவிடம் நீ கடவுளாக இங்கு இருந்து எல்லாம் செய்வது எளிது. ஆனால் மனிதராக இருந்து செய்வதுதான் கஷ்டம். நீயும் மனிதராக இருந்து செய்து பார் தெரியும் என்று கூறும் காட்சி நன்றாக இருந்தது. இரண்டாம் பாதியில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது போல ஒரே நீதிபதி ஒரே நீதிமன்றம் ஒரே வழக்கு என்பது போல ஒரே விஷயத்தையே காட்டிக் கொண்டு இருந்தார்கள்.

இரண்டாம் பாதியில் வந்த வழக்குகளும் சுவாரசியமாக இல்லை. முதல் பாதியில் மனிதனை மனிதன் வென்றான் என்பது சுவாரசியமாக இருந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் மனிதனை கடவுள் வென்றான் என்பதில் என்ன சுவாரசியம் இருக்க போகிறது? இரண்டாம் பாதி முழுவதும் சூர்யா கடவுளாகவே வருகிறார். அதில் அவர் தனக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம் காட்டி வில்லனை வீழ்த்துகிறார்.

அதுமட்டுமில்லாமல் கதை எதை நோக்கி நகர்கிறது என்று தெரியவில்லை. அது தனது இஷ்டத்திற்கு சென்றுள்ளது. ஏதேதோ படங்களின் ரெபஃரென்ஸ் வருகிறது. கிளைமாக்ஸ்சில் ஒரு கதாபாத்திரம் வருகிறது. அது சூர்யா மாதிரி இல்லை. கார்த்தி போல தெரிகிறது. படத்தில் வரும் கோர்ட் காட்சிகளும் அதற்காக வைக்கப்படும் வாக்குவாதங்களும் சுவாரசியமாக இல்லை.

இனி இந்த படத்திற்கு வரப்போகும் பிரமோஷன் எல்லாம் அந்த ஊரில் 50 பெண்கள் சாமி ஆடினார்கள், இந்த ஊரில் 100 பெண்கள் சாமியார்கள் என்று வீடியோக்கள் இணையத்தில் பகிர்ந்து படத்திற்கான பிரமோஷன் வேலைகளை சிறப்பாக நடத்தி படத்தை ஹிட் ஆக்கி விடுவார்கள். படத்தின் முதல் பாதி ஓகே. ஆனால் இரண்டாம் பாதி மிகவும் மோசம். அதேபோல் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த படம் ஒர்க் அவுட் ஆகும். ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு மண்டை பத்திரம் என்று தனது விமர்சனத்தில் ப்ளூ சட்டை மாறன் கூறியிருக்கிறார்.

சற்று முன்