மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் சிம்பு கடைசியாக நடித்து வெளியான படம் தக்லைஃப். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. நடிகர் கமல்ஹாசனுக்கும் இது ஏமாற்றம் தந்த தோல்வி படம்தான். இதையடுத்து நடிகர் சிம்பு இப்போது அரசன் படத்தில் நடித்து வருகிறார்.
கலைப்புலி தாணு தயாரிப்பில் அரசன் படம் உருவாகி வருகிறது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே படப்பிடிப்பு கோவில்பட்டியில் துவங்கி விட்டது. ஏறக்குறைய இந்த படப்பிடிப்பு துவங்கி 6 மாதங்களாகி விட்டது.
ஆனால் இன்றைய நிலவரப்படி இந்த அரசன் படத்தின் படப்பிடிப்பு இதுவரை 20 நாட்கள் மட்டுமே நடந்து முடிந்துள்ளது. இந்த படத்துக்கு ஷெட்யூல் எல்லாம் இல்லை. இன்று படப்பிடிப்பு நடந்தால் மாலையில் படப்பிடிப்பு முடியும் நேரத்தில்தான் நாளை படப்பிடிப்பு உள்ளதா, இல்லையா என்பதே முடிவாகிறதாம்
மேலும் அரசன் படத்துடன் ராஜன் வகையறா படத்தையும் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் தயாரிப்பாளரும் தாணுதான். இந்த 2 படங்களையும் வெற்றிமாறன் மாறி மாறி இயக்கி வரும் நிலையில், அரசன் படப்பிடிப்பு 20 நாட்களே நடந்து முடிந்துள்ளது. நடிகர் சிம்பு இந்த படத்தை முடித்து விட்டு வரும் ஆகஸ்ட் மாதம் தனது அடுத்த படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் ஏற்கனவே விடுதலை விடுதலை 2 படங்களை ஆண்டுக்கணக்கில் எடுத்தவர். அரசன் படத்தையும் எடுத்து முடிக்க பல மாதங்கள் செய்துவிடுவார் என்பது இப்போது தெரிந்து விட்டது. ஏனெனில் படம் ஷூட்டிங் துவங்கி 6 மாதங்களான நிலையில் 20 நாட்கள் மட்டுமே அரசன் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இயக்குனர் வெற்றிமாறனிடம் சிம்பு மாட்டிக்கொண்டாரா, அல்லது சிம்புவிடம் வெற்றிமாறன் மாட்டிக்கொண்டாரா என்பது போக போக தான் தெரியும். ஆனால் படப்பிடிப்பை இழுத்தடிப்பதில் விமர்சனத்துக்கு உரியவர் வெற்றிமாறன் தான் என்பதால், நடிகர் சந்தானம் பேசிய காமெடி பஞ்ச் டயலாக், அவர் இன்னும் திருந்தல மாமா என்று சிம்பு ரசிகர்கள் கமெண்ட் செய்து வெற்றிமாறனை கலாய்த்து வருகின்றனர்.





