தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் ஜெயம் ரவி. இப்போது ரவிமோகன் என பெயரை மாற்றியுள்ளார். ஆரம்பத்தில் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு இளம் வீரராக வலம் வந்த ரவி மோகன் பல வெற்றி படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்தார். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு அவர் நடித்த படங்கள் எல்லாமே தொடர்ந்து பிளாப் ஆயின.
பல படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் மோசமான படங்களாக தோல்வியை தழுவியது. இதனால் அந்த படங்களை தயாரித்த தயாரிப்பாளர்களும் பலத்த நஷ்டமடைந்தனர். இதற்கிடையே குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக தனது மனைவி ஆர்த்தியை நடிகர் ரவி மோகன் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
மேலும் பின்னணி பாடகி கெனிஷா என்பவருடன் அவர் நெருக்கமான நட்பில் இருந்ததும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஆர்த்தியை திருமணம் செய்த பிறகு அவர் அனுபவித்த பல கொடுமைகள் பற்றியும் அதை வெளியில் சொன்னால் தனக்குத் தான் அசிங்கம் என்று அமைதியாக இருந்ததாகவும் கூறினார்.
மேலும் தனது பிள்ளைகளை கூட பார்க்க விடாமல் மனைவி குடும்பத்தினர் தடுப்பதாகவும் சினிமாவில் எவ்வளவு சம்பாதித்த போதும் எனக்காக வங்கிக் கணக்கு கூட கிடையாது என்றும் ரவி மோகன் ஆதங்கமாக பேசினார். மேலும் தற்போது மிகப்பெரிய மன உளைச்சலில் அமைதியின்றி இருப்பதால் விவாகரத்துக்கு பிறகு தான் மீண்டும் படங்களில் நடிப்பேன் என்றும் நடிகர் ரவிமோகன் ஆவேசமாக கூறினார்.
நடிகர் ரவி மோகனுக்கு ஆதரவாக நடிகை மீரா சோப்ரா தனது கருத்தை கூறியிருக்கிறார். தமிழில் அன்பே ஆருயிரே லீ மருதமலை மற்றும் நடிகர் சிம்பு நடித்த காளை என சில படங்களில் நிலா என்ற பெயரில் நடித்தவர் நடிகை மீரா சோப்ரா. அவர் தனது எக்ஸ் பக்கத்தில் ரவிமோகனுக்கு ஆதரவாக ஒரு பதிவை அவர் செய்திருக்கிறார். அந்த பதிவில் ரவிமோகனை எனக்கு நன்றாக தெரியும். தென்னிந்திய படங்களில் நடிக்க வந்த போது அவருடன் பழகி இருக்கிறேன்.
மேலும் விவாகரத்து என்று வரும்போது ஆண்களை மட்டுமே குறை சொல்லக்கூடாது. பல பெண்களும் தவறு செய்கிறார்கள். அதனால் இரண்டு பக்கமும் இருக்கும் நியாயத்தை கேட்டு அறிய வேண்டும். அத்துடன் ரவி மோகன் ஒரு இனிமையான மனிதர். ரொம்பவும் எளிமையானவர். அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அந்த பதிவில் நடிகை மீரா சோப்ரா கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





