கடந்த 1990களில் தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. சில்க் ஸ்மிதாவை போலவே தாரளமாக கவர்ச்சி நடித்த இவர், சிறியவர் முதல் முதியவர் வரை பலரது இரவு நேர தூக்கத்தை கெடுத்தார்.
தமிழில் ஷகிலா நடித்த படங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. பெரிய நடிகர்கள் படங்கள் திரையிட்ட தியேட்டர்களில் காலை மற்றும் நைட் ஷோ என சிறப்பு காட்சிகளாக ஷகிலா நடித்த படங்கள் திரையிடப்பட்டன. நடிகர் படங்களை காட்டிலும், ஷகிலா படங்களுக்கு தியேட்டர்களில் வசூல் கல்லா கட்டியது.
குறிப்பாக கேரளவில் மோகன்லால், மம்முட்டி படங்களுக்கு போதிய கூட்டம் வராத நிலையில், ஷகிலா நடித்த படங்களுக்கு தியேட்டர்களில் ரசிகர் கூட்டம் பொங்கி வழிந்தது. இதனால் முன்னணி நடிகர்களின் படங்களை விலக்கி விட்டு, ஷகிலா படங்களை திரையிட, தியேட்டர்களுக்குள் கடும் போட்டியே நிலவியது.
அந்தளவுக்கு முன்னணியில் இருந்த நடிகை ஷகிலா, இப்போது கவர்ச்சி படங்களில் அதிகமாக நடிப்பதில்லை. தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். யூடியூப் சேனல் நடத்தி வரும் ஷகிலா பிரபல நடிகர், நடிகைகளை அடிக்கடி நேர்காணல் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகை ஷகிலா தனது அண்ணன் மகள் ஷீத்தல் என்பவரை 6 மாத கைக்குழந்தையாக இருந்த போதே தத்தெடுத்து, தனது வளர்ப்பு மகளாக வளர்த்து வருகிறார். சமீபத்தில் அவர்களுக்குள் குடும்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேச ஷகிலாவின் வீட்டில் சந்தித்துள்ளனர்.
அப்போது ஷீத்தல், அவரது சொந்த அம்மா, ஷீத்தலின் அக்கா ஜமீலா ஆகியோரும், ஷகிலாவின் வக்கீல் சவுந்தர்யா என்பவரும் இருந்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஷீத்தல், ஷகிலாவை தாக்கி, கீழே தள்ளிவிட்டு ஆவேசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதை தடுக்க சென்ற வக்கீல் சவுந்தா்யாவும் தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், கோடம்பாக்கம் போலீசார் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





