- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா 44 படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகர், அட இவரும் அந்த படத்தில் நடிக்கிறாருன்னா...

சூர்யா 44 படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நடிகர், அட இவரும் அந்த படத்தில் நடிக்கிறாருன்னா தரமான சம்பவமா இருக்குமே? – போட்றா வெடிய!

- Advertisement -

நடிகர் சூர்யா இப்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சூர்யா 44 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யா மூன்று மாதங்களுக்கு மேலாக நடித்துவரும் நிலையில், படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டுக்கு இந்த படம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது. இதற்கிடையே சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படத்தின் முதல் பாகம் வருகிற அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தேதியில் ரஜினிகாந்த் நடித்த வேட்டைக்காரன் படம் ரிலீஸ் ஆவதால் தங்குவா படத்தை தள்ளி வைத்துள்ளனர்.

- Advertisement -

மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, தமிழ் சினிமாவின் அடையாளம் மூத்த நடிகர் ரஜினிகாந்த். அவரது வேட்டையன் படம் வருவதால் கங்குவா படம் வழி விட்டு ஒதுங்கிக் கொள்வதாக கூறி, ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுகிறது என்று கூறியிருந்தார். அதனால் டிசம்பர் மாதம் கங்குவா படம் ரிலீஸ் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்ற ஒரு தகவலும் பரவி வருகிறது.

இப்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 44வது படம் பெரிய எதிர்பார்ப்பே ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். சிங்கம் படத்தில் சூர்யா – பிரகாஷ்ராஜ் காம்பினேஷன் பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது. வில்லன் நடிப்பில் சூரிய பிரகாஷ்ராஜ் எப்போதுமே தனித்து தெரிவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

டைரக்டர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இழந்த சூர்யா, அதேபோல் புறநானூறு என்ற படத்திலும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பையும் இழந்தார். இந்தியில் கர்ணா என்ற படம் நடிக்க இருந்து அந்த படத்தில் இருந்தும் அவர் விலகி விட்டார். அந்தப் படம் அதிக பொருட்செலவில் உருவாக்க திட்டமிட்டதால் அதில் தென்னிந்திய நடிகரான சூர்யா நடிப்பது அதிக வெற்றியை தருமா என்ற கோணத்தில் யோசித்த பட தயாரிப்பு நிறுவனம், அந்த படத்தை தயாரிக்காமல் அப்படியே கைவிட்டு விட்டது.

இந்த சூழ்நிலையில் நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் தனது 44வது படத்தை பெரிய அளவில் நம்பி இருக்கிறார். இந்நிலையில் இப்போது நடிகர் பிரசாந்த் இந்த படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துள்ளது. சமீபத்தில் அந்தகன் படம் பிரசாந்துக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் தி கோட் படத்திலும் விஜயுடன் பிரசாந்த் நடிப்பு பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இப்போது அதன் தொடர்ச்சியாக நடிகர் சூர்யா படத்திலும் பிரசாந்த் நடிப்பது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

சற்று முன்